ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்

Read Time:3 Minute, 39 Second

pirakashraj2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார். காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக ‘காஞ்சிவரம்’ தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், அகில இந்திய அளவில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார். இந்த விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவன் கட்டிடத்தில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘காஞ்சிவரம்’ படத்துக்கான விருதை அதன் தயாரிப்பாளர் சைலேந்திர சிங் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோர் பெற்றனர். அந்த படத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடமிருந்து பலத்த கரவொலிக்கிடையே பெற்றார். தேசிய அளவிஸல் இரண்டாவது முறையாக விருது பெறுகிறார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே, ‘இருவர்’ படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதை அவர் பெற்றுள்ளார்.

உமாஸ்ரீ..

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, கன்னட நடிகை உமாஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்கு படமாக ஷாருக்கான் நடித்த ‘சக் தே இந்தியா’ இந்தி திரைப்படம் தேர்வு பெற்றிருந்தது. அந்த விருதை படத்தின் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மற்றும் இயக்குனர் சிமித் அமின் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த இயக்குனருக்கான விருதை பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு வழங்கினார் பிரதிபா பட்டீல். தமிழில் சிறந்த படமான ‘பெரியார்’ படத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

மன்னா டே-க்கு தாதா சாகேப் பால்கே விருது…

பிரபல இந்துஸ்தானி மற்றும் இந்தி பாடகர் மன்னா டே, ‘தாதா சாகிப் பால்கே’ விருதைப் பெற்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு, தங்கத் தாமரை மற்றும் சால்வை வழங்கப்பட்டது.

அவருக்கு விருது வழங்கும்போது, ‘மன்னா டே, ஒரு மிகச் சிறந்த பாடகர்’ என்று பிரதீபா பட்டீல் பாராட்டினார்.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சங்கர் மகாதேவனும், பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷலும் பெற்றனர்.

நேற்றைய விழாவில் மொத்தம் 53 விருது கள் வழங்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் இராணுவத்தளபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதாவென ஆராயும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு
Next post மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!