மன்னார் மாந்தையில் மீள்குடியேற்ற நிகழ்வு, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு
மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்டமாக அங்கு 1300பேர் இன்றையதினம் குடியேற்றப்பட்டனர். ஓரிரு தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் மீள்குடியேற்றப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப நிகழ்வு வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலைமையில் இன்றுமுற்பகல் மாந்தையில் நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி சி.கிஷோர், முன்னைநாள் ரி.யூ.எல்.எவ் எம்.பி சூசைதாசன், இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலசூரிய உள்ளிட்டவர்களும், அரசாங்க உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். மீள்குடியேற்ற ஆரம்ப நிகழ்வில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், இம்மக்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்பதை பல காலமாக நாம் வலியுறுத்தி வந்தோம். தற்போது இந்த மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுக்கும் இந்த மக்களுக்கும் மிகவும் சந்தோசமான ஒரு விடயமாகும். இந்த மக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இறுதியாக இடம்பெயர்ந்த இம்மக்கள் மெனிக்பாம் முகாமைச் சேர்ந்தனர். இவ்வாறு வந்துசேர்ந்த மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் என பலரும் கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், இந்தக் குடியேற்றங்களை சிறப்பாக ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். இம்மக்களை மீண்டும் அமைதியாக தங்களுடைய சொந்தக் கால்களில் வாழவைப்பதற்கு நாங்களும் எமது முழுமையான முயற்சிகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating
One thought on “மன்னார் மாந்தையில் மீள்குடியேற்ற நிகழ்வு, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
இந்தியா இலங்கையை விட ஐம்பது மடங்கு பெரியது
கனடா இலங்கையை விட நூற்றினாற்பது மடங்கு பெரியது.
கனடா இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகார பரவலாக்கம் தேவை
மிகச் சிறிய நாடான இலங்கைக்கு அதிகார பரவலாக்கம் உண்மையில் தேவையா?
இலங்கை அரசியலில் பலரும் புரிந்து கொள்ளத் தவறிய விடயம் என்னவென்றால் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரங்களை எந்தவொரு மாகாண சபைக்கும் பகிர்ந்தளிக்க இலங்கை பாராளுமன்ற அரசியலில் உள்ளவர்கள் தயாரில்லை