வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரவுள்ளதாக முத்துஹெட்டிகம தெரிவிப்பு

Read Time:1 Minute, 46 Second

வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென்மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம அறிவித்துள்ளார் அண்மைக்காலமாக தமக்கு கொலைமிரட்டல் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தாம் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம்கோர உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் இந்தியா பிரிட்டன் அல்லது கனடா ஆகிய நாடுகளில் ஒன்றில் தாம் அரசியல் புகலிடம் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் காவல்துறையினரது நடவடிக்கைகள் தொடர்பில் தாம் ஒருபோதும் திருப்தியடையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டால் நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்பில் கடும் விமர்சனப்பாங்கான கருத்துக்களை முத்துஹெட்டிகம அண்மைக்காலமாக வெளியிட்டு வருவதும் குறிப்பிடதக்கது இடம்பெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது நிசாந்த முத்துஹெட்டிகம அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் மூன்றாம் நிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?
Next post அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணம்