இடைதங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகச் சந்தேகித்து வவுனியாவில் அதிகரித்து வரும் சோதனை நடவடிக்கைகள்!

Read Time:2 Minute, 19 Second

வவுனியா நகரிலும் நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. நகரவீதிகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என்பன வீதித்தடை முகாம்களில் மறித்து சோதனையிடப்படுகின்றன அத்துடன் சைக்கிள்களில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அந்த சைக்கிள்களின் இலக்கங்களும் பொலிஸாரினால் சிலவேளைகளில் பதிவு செய்யப்படுகின்றன. சோதனைக்கு உள்ளாக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்படுவதுடன் மோட்டார் சைக்கிள்களுக்குரிய ஆவணங்களும் சாரதி அனுமதிப்பத்திரமும் பொலிஸாரினால் பரிசீலனை செய்யப்படுகின்றன. நகரத்தின் முக்கிய வீதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்ற காலை மாலை வேளைகளில் முக்கிய சந்திகளில் ஏராளமான போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் கண்காணிக்கப்படுகின்ற அதேவேளை பிரதான வீதிகளில் பத்தடிக்கு ஒரு பொலிஸார் வீதத்தில் கடமையில் ஈடுபடுகின்றனர். இடைதங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் மறைந்திருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காகவே வீடுகள் சோதனையிடப்படுவதாக கூறப்படுகிறது  எனினும் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து பொலிஸ் இராணுவத் தரப்பிலிருந்து எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை!
Next post யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்..!