ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் வெற்றி பெறுவேன் -எஸ்.பி.திஸாநாயக்கா

Read Time:2 Minute, 57 Second

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை ஆனல் ஜனாதிபதித் தேர்தலில் நான்போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவருமான எஸ்;.பி.திஸாநாயக்க தெரிவித்தார் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதா இல்லையா என்பதில் தீர்மானம் எடுக்கப்படவில்லை அதேவேளை பிரதித்தலைவர் கருஜயசூரிய போட்டியிடப் போவதில்லையென தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் தயாராகவுள்ளேன். நான் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுவேன் இது நிச்சயம் இடம்பெறும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபல்யமிக்க பொதுச்செயலாளராக நான் கடமையாற்றியவன் அன்று தற்போதைய செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பொதுச்செயலாளர் பதவிக்கு என்னுடன் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார் எனவே இன்னமும் எனக்கு சுதந்திர கட்சிக்குள் செல்வாக்கு இருக்கிறது. விஷேடமாக தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவும் உண்டு அவர்களது பிரச்சனைகளின் போது அம்மக்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகார பரவலாக்கலை வழங்க வேண்டுமென்று அன்று தொடக்கம் இன்றுவரை வலியுறுத்தி வருகிறேன் அதுமட்டுமல்ல காணி பொலிஸ் உரிமைகளோடு அதிகாத்தை பகிரவேண்டும் என்பதே எனது வலியுத்தலாகும் எனவே தமிழ் மக்களது வாக்குகள் எனக்கு கிடைக்கும் அத்தோடு வாக்குகளையும் பெறமுடியும் எனவே நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்;புப்பிரிவு அமைக்க நடவடிக்கை