யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்

Read Time:2 Minute, 14 Second

யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாமுக்கு வெளியே தங்குவதற்கு இடமுள்ளவர்களும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 5பேர் கொண்ட குடும்பம் சார்பாக அவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய இடங்களில் 3வீடுகள் உள்ளன எனவே அவர்கள் தடுப்பு முகாமில் தங்கவேண்டிய அவசியமில்லை அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியே அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கின் விசாரணையைக் அவதானித்த உச்சநீதிமன்ற நீதிபதி 36வயதான சோபிகா சுரேந்திரநாதனும் பெற்றோர் தங்குவதற்கு இடம் இருக்கும் போதும் இவர்களை கவனிப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கும் போதும் மேற்கொண்டு தடுப்புமுகாமில் தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையிலுள்ள மக்கள் அனைவரையும் போல தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்கும் சம உரிமை சமபாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை பற்றியும் இலங்கைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை பற்றியும் வாதாட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது இதுதொடர்பாக நவம்பர் மாதம் 12ம் திகதிக்கு விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்..!
Next post அங்குலான பிரதேசத்தில் இரண்டுகிளைமோர் குண்டுகள் மீட்பு