இரண்டரை ஆண்டுகளில் 14 பெண்களை மணந்த நபர்!
இந்தியா மும்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஒவ்வொருடன் தனி தனியான இடங்களில் 14 வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மும்பையை சேர்ந்தவர் துஷார் வாக்மரே. ஏர் இந்தியா நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வரும் இவர் தனது பெயரை மாற்றி கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷ்னர் வாத்கர் கூறுகையில், அந்த நபர் மீது ஐந்து மனைவிகள் புகார் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 9 பெண்களும் தங்களது மானம் போய்விடும் என புகார் தரவில்லை. துஷார் கடந்த 2006ல் இணையத் தளம் ஒன்றின் மூலம் பெண் வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதில் தனக்கும், தனது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், வேலைக்கு செல்லும் பிராமண பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அவர் பிராமண பெண்களை திருமணம் செய்வதற்காக தான் தனது பெயரை துஷார் பபத் என மாற்றி கொண்டுள்ளார். அந்த பெண்கள் விவாகரத்து ஆனவர்களாகவோ அல்லது விதவைகளாகவோ இருந்தாலும் பரவாயில்லை என குறிப்பிட்டார். இதையடுத்து அவரை ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டனர். இப்படி தனக்கு வந்த வரன்களில் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக திருமணம் செய்து கொண்டுள்ளார். மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என பெண் வீட்டாரும் இவரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டனர். அவர் காட்டிய விவாகரத்து பத்திரம் ஒன்றை மட்டும் பார்த்து ஏமாந்து போயுள்ளனர். ரூ. 70,000 சம்பளம் வாங்கும் துஷார் அதை வெகு சில நாட்களிலே செலவழித்துவிட்டார். மாதத்தின் இரண்டாவது பாதியில் மனைவிகளின் சம்பளத்தில் அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சம் என வாங்கி பிழைத்துள்ளார். அவரை திருமணம் செய்து கொண்ட பெண்களில் மூன்று பேர் என்ஜினியர்கள்.
ஒரு மனைவியுடன் மூன்று நாள்…
தற்போது எங்களிடம் அவரது ஐந்து திருமண படங்கள் சிக்கியுள்ளது. அவர் ஒவ்வொரு மனைவியுடன் மூன்று நாள் தான் தங்கியுள்ளார். நான்காவது நாள் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன், அலுவலக கூட்டம் என்று எதாவது சாக்கு சொல்லி வந்துள்ளார் என்றார்.
சிக்கியது எப்படி…
இப்படி 14 பெண்களை ஏமாற்றிய துஷாரின் குட்டுக்கள் அவரது 29 வயதான 14வது மனைவியின் மூலம் வெளிவந்துள்ளது.
தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கும் துஷாரை வரும் 29ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர் வேலை பார்த்து வரும் ஏர் இந்தியா நிறுவனமும் துஷார் மீது சக பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டி, விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த ஐந்து மனைவிகள் போலீசில் புகார் கொடுத்திருப்பதால் அவர் வேலையில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating