ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!
தனது நீண்ட நாள் காதலியான ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா லெமிகோவாவை மகளிர் டென்னிஸ் உலகின் ஜாம்பவானான மார்ட்டினா நவ்ரத்திலோவா மணக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினாவுக்கு 52 வயதாகிறது. அவரது காதலியான ஜூலியாவுக்கு 36 வயதாகிறது. ஜூலியா மாஸ்கோவில் பிறந்தவர். மிஸ் சோவியத் யூனியன் அழகிப் பட்டம் வென்றவர். அவர் தான் கடைசி மிஸ் சோவியத் யூனியன் ஆவார். அதன் பின்னர் நாடு சிதறிப் போய் விட்டது. ஜூலியாவும், மார்ட்டினாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதுகுறித்து எந்தவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் சமீபத்தில் இருவரும் பிரான்ஸின் செயின்ட் டிரோப்ஸ் என்ற இடத்தி்ல் விடுமுறைக்காக ஜோடியாக வந்திருந்தனர். இதன் மூலம் இருவரும் ஓரினக் காதலில் இருப்பது உறுதியானது. இருவரது இடது கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரங்கள் பளிச்சிட்டன. இதனால் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரெஞ்ச் ரிவியரா பகுதியில் மார்ட்டினாவும், ஜூலியாவும் படு நெருக்கமாக படகு சவாரி மேற்கொண்டதாகவும், ஷாப்பிங் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன. ஜூலியாவின் தந்தை சோவியத் யூனியன் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். ஜூலியாவுக்கு ரஷ்யன், ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்சு என பல மொழிகள் தெரியும். மாஸ்கோவில் அழகு சாதனப் பொருட்கள் கடை வைத்துள்ளார். பாரீஸில் ஜோயா ஸ்பா என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மார்ட்டினா ஓரினக் காதலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல பெண்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தது. விரைவில் ஜூலியாவை பகிரங்கமாக மார்ட்டினா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
Average Rating
One thought on “ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
என்ன கொடுமை சார் இது…