சிங்கள புலிகள் இருவர் விடுதலை

Read Time:2 Minute, 32 Second

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்து�ழப்பு வழங்கினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்களவர்கள் இருவரை விடுதலை செய்ய நீதிமன்றம் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது. எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் கடந்த இரண்டரை வருடங்களாக தடுத்து வைத்திருந்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவ்விருவரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அதனைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது. சிங்களப் புலிகள் எனும் முத்திரை குத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சுனிர பிரியங்கர போபகே மற்றும் சரத்சந்திர ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர். இதேவேளை சிங்களப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலம் பல சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்குள் பல்வேறு அசளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று வெலிக்கடை மஜிஸ்ரேட் சிறைச்சாலையில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்படி மனு தொடர்பில் பூரணை அறிக்கையொன்றைத் தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்குமாற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறாக நீதிமன்றத்தில் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறைக் கைதிகள் சார்பில் சட்டத்தரணிகளான மஞ்ஜுல பதிராஜ மற்றும் சேனக பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேபி கைதாவதற்கு முன்னர் தயாமோகனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
Next post கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகளுக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளன -சிங்களப் பத்திரிகை