அங்குலான, நிப்புன மீதான தாக்குதல் சம்பவங்கள். விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு

Read Time:3 Minute, 4 Second

மாணவன் நிப்புன ராமநாயக்க மீதான தாக்குதல் மற்றும் அங்குலானவில் இரு இளைஞர்களின் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கோரியுள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொளு;ளமுர்ற சம்பந்தப்பட்டவர்களை ஜனாதிபதி ஏற்கனவே கோரியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நீதியை பாதுகாக்கும் அதிகாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் அவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் அந்த விடயத்தில் அரசியல் தலையீடுகளை செய்து சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கம் அரசிடம் இல்லையென்றும் இவர்களைப் பாதுகாத்து அரசு சேறு பூசிக் கொள்ள விரும்பவி;ல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 415 பொலிஸ் நிலையங்களும் 74 ஆயிரம் பொலிஸாரும் உள்ளனர் எனினும் ஒரு சிலர் செய்கின்ற தவறுகள் காரணமாக ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறைகூறவோ, தரக்குறைவாகக் கதைக்கவோ முடியாது என்றும் தெரிவித்துள்ள அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதன் காரணமாகவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேடுவதை விட்டுவிட்டு சட்டத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “அங்குலான, நிப்புன மீதான தாக்குதல் சம்பவங்கள். விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply

Previous post கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம்
Next post ” I LOVE YOU MOM “