புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? – திடுக்கிடும் தகவல் அம்பலம்

Read Time:3 Minute, 36 Second

aniltteபுலிகளின் தலைமை செயலகம் எனவும் புலிகளின் தளபதி எனவும் பல முன்னைநாள் கிழக்கு தளபதிகள் பரபரப்பாக சர்வதேசத்தில் நிலை கொண்டுள்ள புலிகளின் தளபதிகள் போராளிகளுடன் உரையாடி வருகின்றனர். இவர்கள் தாம் காடுகளில் இருப்பதாகவும் போராடி வருவதாகவும் சிங்கள இராணுவத்தை கொல்லபோவதாகவும் விறுவிறுப்பாக பேசி வரகிறார்கள். விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புடன் இவர்கள் தொலைபேசியில் மட்டும் தொடர்பு வைத்துள்ளார்கள். ஆனால் உண்மை வடிவம் என்பது வேறு என்று லங்கைகாடியன் என்ற இணையத்தின் ஆசரியர் நிலந்த இலங்கமுக விபரித்துள்ளார். அதாவது தளபதி றாமுடைய மனைவி பிள்ளைகளை கடத்திய இராணுவம் இரகசியமாக தளபதி றாமை உயிருடன் பிடித்தது. உயிருடன் பிடிபட்ட றாமுக்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கபட்டு கே.பி முதல் கனடாவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புலிகளை ஒருங்கினைக்குமாறு ராமினூடாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு உத்தரவு கொடுத்துள்ளது.
1) முதல்கட்டமாக புலிகளின் முக்கியஸ்தர்களை தளபதி றாமையும் தயாமேகனையும் வைத்து ஒருங்கமைத்தல்.
2) தயாமோகனுக்கு கடவுச்சீட்டு கொடுத்து மலேசியா கொண்டு சென்று கே.பியை பிடித்தல்.
3) டென்மாக் நோர்வே கனடா லண்டன் மற்றும் பல ஜரோப்பிய நாடுகளில் உள்ள புலிகளின் பிரதம இயங்கு சக்திகளுடன் தொர்புகளை ஏற்படுத்தி ஒலிபதிவுகளை பதிவு செய்து அவர்களை ஒருங்கமைத்து நீண்டகாலத்தில் பொறிகள் அமைத்து கடத்தி செல்லுதல்.
4) இதன் ஊடாக ஜரோப்பாவில் மறைந்துள்ள அனைத்து புலிகளையும் ஒழுங்கமைத்து புலிகள் என்ற இயக்கத்தை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவே இயக்குதல்.
5) ஜரோப்பாவில் புலிகள் என்ற இலங்கை இராணுவபுலனாய்வு பிரிவின் ஒட்டு குழு ஒண்றைஉண்மையான புலிகளின் பிரபலமான தளபதிகளை வைத்து இயக்குதல்.
இதன் ஊடாக ஒட்டுமொத்த புலிகள் அமைப்புக்கு ஆப்பு இறுக்குதல் ஆகிய 5 திட்டங்கள் வரையபட்டு செயற்படுத்தபட்டு வருவதாக நிலந்த இலங்கமுவவின் கட்டுரை சுட்டி காட்டுகிறது. முதல்கட்டமாக கே.பி மொசாட் இந்திய > இஸ்ரேலி> மலேசிய சதியில் மாட்டியுள்ளார். தற்போது கே.பி மாட்டியுள்ளதை தொடர்ந்து இலங்கை புலனாய்வு பிரிவு ஜரோப்பாவில் உள்ள 05 புலிகளின் முக்கிய புள்ளிகளை தூக்கும் திட்டத்தை தீட்டியுள்ளதாக அறிய முடிகிறது. இந்த செய்தி லங்காகாடியனை ஆதரமாக வைத்து எழுதபட்டது ஆகவே எமக்கு உண்மை பொய் தெரியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?
Next post பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பாளர் கொலை.. சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு