யாழ் துணை மேயர் பதவியை கோருகிறது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையின் வடக்கே அண்மையில் நடைபெற்று முடிந்த யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த சபைக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கானவர்களின் பெயர்களை ஈபிடிபி கட்சியினர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் துணை மேயர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. இது குறித்து அக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அமிர் அலி கூறும் போது, இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கணிசமான முஸ்லிம்கள் ஆதரவாக வாக்களித்ததால், தார்மீக அடிப்படையில் தங்களுக்கு இந்த பதவி கிடைக்க வேண்டும் என்றார். இது குறித்து ஈபிடிபி கட்சியின் தலைவரும் இலங்கை அரசின் சமூக சேவைகள் துறையின் அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் கூறும்போது, இது குறித்து தனது கட்சியினருடன் தான் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்து தாங்கள் முடிவு எடுப்போம் என்றும் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating