ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே முக்கிய இலக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு

Read Time:1 Minute, 18 Second

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே தமது முக்கிய இலக்காக அமைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான அமரர் ரெஜி ரணதுங்கவின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட ஐக்கிய இலங்கையை காண்பதே ரெஜி ரணதுங்கவின் நீண்டநாள் கனவாக அமைந்திருந்ததென அவர் தெரிவித்துள்ளார் துரதிஷ்வசமாக அவரின் கனவு இன்று நிறைவேறியுள்ளபோதிலும் அதனை காண்பதற்கு அவர் உயிரோடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார் எந்தவொரு சக்திக்கும் அடிபணியாத நாட்டின் சகல மக்களுக்கும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே முக்கிய இலக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு

  1. இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் அந்த மக்களின் பிரஜாவுரிமையை இல்லாமலாக்கியது தொடக்கம் அந்த மக்களின் பல அவலங்களுக்கான மூல காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியே விளங்கியுள்ளது. ஆயினும் மஹிந்த சிந்தனையில் வாக்களிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த மூன்று வருட காலத்துக்குள் பெருந்தோட்டப் பிரதேசங்களில் நடைபெற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக மலையகப் பிரதேசங்களில் ஒரு புத்தெழுச்சி உருவாகியுள்ளது எனலாம்.

    மலையக வரலாற்றில் ஒரே தடவையில் ஆகக் கூடிய ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட நிகழ்வு இந்த அரசாங்கத்திலேயே நடந்துள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் மேற்கொள்ளப்பட்ட அந்த நிகழ்வின் மூலமாக சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மலையக இளைஞர்;, யுவதிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதற்கு மேலாக மஹிந்த சிந்தனையின் இன்னொரு வாக்குறுதியான பெருந்தோட்ட தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தின் முதலாம் கட்டத்தில் சுமார் அறுநூறு மலையக இளைஞர்;, யுவதிகளும் இரண்டாம் கட்டத்லும் அதனை ஒத்த அளவான இளைஞர்;, யுவதிகளும் தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று மலையக மக்களுக்கான அரச சேவை இணைப்பாளர்களாகப் பணி புரிந்து கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக மலையக மக்களுக்கு தமது விடயங்களை அரசாங்க அலுவலகங்களில் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ளத்தக்கதான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

    தோட்ட மக்களின் வருமானத்தைக் கருத்திற் கொண்டு அவர்களுக்குச் சலுகை விலையில் அரிசியை வழங்கும் திட்டமொன்றை ஜனாதிபதி அவர்கள் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக மலையக மக்கள் தமது வருமானத்துக்கேற்றவாறு வாழ்வதற்கான வாய்ப்பும், தேவையான போசாக்கைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது.

    மலையக மக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அடுக்குமாடி வீடுகள் அமைக்கும் திட்டம் மஹிந்த சிந்தனையின் இன்னொரு வெற்றிகரமான பிரசவமாகும். இன்றைக்கு மலையகத்தின் பல பகுதிகளிலும் தோட்ட மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டு;ள்ளன. அதனுடன் இணைந்ததாக மலையகத்தின் பாதை வசதிகள், தோட்டக்குடியிருப்புகளுக்கான மின்சார வசதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் கணிசமான அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

    இவற்றுடன் இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக மஹி;ந்த சிந்தனை வாக்குறுதியின் பிரகாரம் மலையக மக்களுக்கான நேரடி தபால் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மலையக மக்களின் வாழ்வில் நிலவிய பெருங்குறையொன்று அதன் மூலமாக தீர்த்து வைக்கப்பட்டு;ள்ளது.

    அத்துடன் மலையக மக்கள் பண்டிகைகளின் போது அதனைச் சந்தோசமாகக் கொண்டாடுவதற்கான வகையில் பண்டிகைக் கால முற்பணம் மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை உயர்த்தப்படுவதில் அரசாங்கத்தின் ஈடுபாடு கணிசமானதாகும். அதற்கு மேலாக தற்போதைக்கு தேயிலைக்கான உச்சபட்ச விலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்பர் மற்றும் தேயிலை என்பவற்றுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

    மேலும் மலையகத்தின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பான அமைச்சுப் பதவிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு மக்கள் சேவைக்கான வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. அதன் மூலம் குறுகிய காலத்துக்குள் மலையகத்தின் அபிவிருத்திக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதில் மஹிந்த சிந்தனை பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    1983ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் கலேவெல இந்துக் கோயில் உள்ளிட்ட இன்னும் பல கோயில்கள் இப்போதைக்கு புனரமைக்கப்பட்டுள்ளன. கலேவெல இந்துக் கோயிலின் காணி கடந்த பல வருடங்களாக பெரும்பான்மையினச் சகோதரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அவர்களின் விசேட தலையீட்டின் காரணமாக அந்தக் காணி இப்போது மீண்டும் கோயிலுக்குக் கிடைத்துள்ளது. மாத்தளை மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சசிகரன் குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொள்வதில் வெற்றி கண்டார். இவ்வாறாக கடந்த மூன்றாண்டு காலப் பகுதிக்குள் மலையகத்தின் பல கோயில்களில் கும்பாபிஷேகமும், இன்னோரன்ன திருவிழாக்களும் விமரிசையாக நடைபெற்றுள்ளன. அதன் மூலம் சமய ரீதியான சேவைகளிலும் மலையக மக்களின் வாழ்வியல் மாற்றத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கூடிய கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Previous post விடுதலைப்புலிகளினால் கொரில்லா முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் -சரத்பொன்சேகா
Next post அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு