புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

Read Time:1 Minute, 26 Second

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கான பொறுப்பாளர் கஸ்ரோ என்றழைக்கப்படும் வீரகத்தி மணிவண்ணன் உள்ளிட்ட 18 நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களின் பெயர் விபரங்களை அடங்கிய பட்டியல் ஒன்றை தாம் மீட்டுள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. கனடா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி, ஒல்லாந்து, மொரீசியஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சுவிடன், பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஒஸ்ரியா, இத்தாலி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் நிதியுதவிகளை சேகரிப்போர் மற்றும் அவற்றின் பொறுப்பாளர்கள் குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

  1. ஒரு பட்டியலும் இவர்கள் மீட்க வில்லை….
    பொட்டம்மானை கொழும்பு நாலாவது மாடியில் வைத்து அடித்து உண்மையை பெறுகிறார்கள்.
    பொட்டம்மான் இன்னும் உயிருடன் உள்ளார் என்பதே லேட்டஸ்ட் நியூஸ்….

    தலைவரும் உயிருடன் பிடிபட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன…. எது உண்மையோ?

Leave a Reply

Previous post புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கப்பம் வாங்கிய கும்பல் கைது
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..