மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா
மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அமைச்சர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கமைய, இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர். முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு நடமாடுவதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டுமென்பதுடன், இந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதியளிக்க வேண்டுமெனவும் கனடிய அமைச்சர்கள் கூறியுள்ளனர். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் நல்லிணக்கம் காணப்படுமென்ற இலங்கை ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டுமெனவும் கனடிய அமைச்சர் தெரிவித்தனர்.
Average Rating
One thought on “மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தமது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார்கள் என்பது உணர முடிகிறது.
1977 ம் ஆண்டு யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் இன்னொரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67% மக்களின் ஆதரவு பெறவேண்டியது நியதியாகும். வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
சுயநிர்ணயம், சுயாட்சி, சமஸ்டி போன்ற கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்கள – தமிழ் இனவாதிகளால் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் விடயங்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமஸ்டி பற்றி பேசிய தமிழரசுக்கட்சியாலும், பின்னர் அதை பிரிவினைவாதமாக மாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியாலும், அதையே அடிப்படையாக வைத்து பிரிவினைவாத யுத்தம் நடாத்திய புலிகளினாலும், அந்த கோட்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பிரிவினைவாத தத்துவமாக விளங்கவைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் பிரிவினையை கோரி நிற்கவில்லை என்பதை நடைமுறையில் நிரூபிக்கும் வகையிலான இடைக்கால தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்.