சகலரும் ஏற்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேச்சு இந்திய அதிகாரிகளிடம் ஜனாதிபதி உறுதி

Read Time:3 Minute, 10 Second

தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலந்தர அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு விரைவில் முன்னெடுக்கும் என்று இந்தியாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப் படுத்த உள்ளதாகவும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்க வுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தியப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் விசேட பிரதிநிதிகளாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் வெளிவிவகாரச் செயலாளரும் சிவ்சங்கர் மேனனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடினார்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு அச் சந்தர்பத்தில் அவர்கள் கோரியுள்ளனர் அதுவே இந்தியாவின் விருப்பம் என்று அவர்கள் வலியுறுத்தினர் அப்போது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு விரைவில் முன் வைக்கப்படும் என்று ஜனாதிபதி இந்தியப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார் இலங்கையில் நிரந்தர சமாதனத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான அரசியல் ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அனைத்து தமிழ்க் கட்சிகளுடன் பரந்துபட்ட பேச்சுக்களைத் தாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ இந்தியப் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் எம்.கே.நாராயணன் சிவ்சங்கர் மேனன் ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் இலங்கைப் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வென்றை உடனடியாகக் காணவேண்டியதன் அவசியம் குறித்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர் அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப் போவதாக இலங்கை அரசு தெரிவித்தது எனக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்
Next post மனிக்பாம் செல்ல அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உதவிகளை மேற்கொள்ள முடியாது -ஐ.சி.ஆர்.சி கவலை