பிரபாகரனின் இறப்புச் சான்றை அளிக்க இலங்கை உறுதி: எம்.கே.நாராயணன் தகவல்

Read Time:1 Minute, 23 Second

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் விவாதிக்க புதன்கிழமை கொழும்பு சென்றார் எம்.கே.நாராயணன். அவருடன் வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனனும் சென்றுள்ளார். ராஜபட்சவுடனான சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் நாராயணன் கூறியது: புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் உள்ளார். இவ்வழக்கு விசாரணையை முடிப்பதற்காக அவரது இறப்புச் சான்றிதழை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் மனைவி, மகள், மகன் இறப்பு: ராணுவம் மறுப்பு
Next post பிரபாகரன் மரணம்:- அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்