பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..

Read Time:5 Minute, 24 Second

lttepiraba-poddu-soosaiவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவர் இறந்தது உண்மையா இல்லையா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துச் சந்தேகங்களுக்கும் அப்பால் இது ஒரு ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மையே என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களான நடேசன், புலித்தேவன், சார்ள்ஸ் அன்ரனி, ரமேஸ், கபில் அம்மான், இளங்கோவன் உள்ளிட்டவர்களின் மரணம் பற்றிய செய்தியை இன்று திங்களன்று காலையில் வெளியிட்ட இலங்கை அரசாங்கம், பிற்பகல் 2 மணியளவில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தது. அம்பியூலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்ல முற்பட்ட போது அவர் படையினரால் கொல்லப்பட்டதாக அது கூறியது. பிரபாகரனுடன் சேர்த்து பொட்டம்மான், சூசை ஆகியோரும் இதன்போது கொல்லப்பட்டு விட்டதாக பாதுகாப்புத் தரப்பு அறிவித்தது. இதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக மோதல்கள் முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்துள்ளது. எனினும், பிரபாகரன் இன்னமும் கொல்லப்படவில்லை எனவும், அவர் இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தப்பிச் சென்று விட்டார் எனவும் புலம்பெயர் தமிழர்களின் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை நிரூபிக்க முனையும் விதமான சில வாதங்களையும் அந்தத் தளங்கள் முன்வைத்துள்ளன. புலிகளின் பல முக்கிய தலைவர்களின் மரணத்தை உறுதிப்படுத்திய இலங்கை அரசாங்கம், பிரபாகரன், பொட்டு அம்மான், சூசையின் மரணத்தை தெளிவாக உறுதிப்படுத்தவில்லை என்ற வாதத்தை சில இணையத்தளங்கள் முன்வைக்கின்றன.
இந்தியாவும், உலகமும் நம்புகிறது

எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை இந்தியாவும், உலக நாடுகள் பலவும் நம்புவதாகவே தெரிகிறது. “பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக எமக்கு அறியத் தந்துள்ளார்‘‘ என இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய ஊடகங்கள் பலவும் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன. ஒரு உத்தியோகபூர்வ இராஜதந்திர தகவல் பரிமாற்றத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதி பொய்த்தகவல் ஒன்றை, அதுவும் இந்தியா அதிகளவில் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பரிமாறச் சந்தர்ப்பம் இல்லை என்று இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் இந்தியாவுடன் இலங்கை விளையாட முடியாது என்று அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல்வேறு வழிகளில் இந்தியா உதவிகளைப் புரிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் போருடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ சம்பந்தப் பட்டடிருந்த இந்தியா பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை ஏதொவொரு வகையில் தனிப்பட்ட ரீதியாகவும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார். அவ்வாறன்றி வெறுமனே இலங்கை அரசாங்கத்தின் தகவலை மட்டும் அடிப்படியாகக் கொண்டு இந்தியா இதனை ஏற்றுக்கொண்டிருக்கச் சந்தர்ப்பமில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவலை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய அரசாங்கம், பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் மரபணு பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வகையில், அந்த வழக்கை உத்தியோகபூர்வமாக முடித்து வைப்பதற்கு இது அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

13 thoughts on “பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..

  1. பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..
    this is the 2009 jokes man 😀
    Keept it up SLA Leaders his buddies , they really tried hard on this but they can’t hide the truth anymore, they might see sooon . how is Mahinda and his brothers gonna die brap brap

    “ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வகையில், அந்த வழக்கை உத்தியோகபூர்வமாக முடித்து வைப்பதற்கு இது அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.”

    well DNA test will for sure man dont work hard on that India and SLA, you will feel the FEAR very soooooon

  2. தலைவர் இறந்தது உண்மையோ பொய்யோ,
    உண்மையாய் இருந்தாலும் இந்த புலன்பெயர் தமிழர் நம்ப மாட்டினம்.
    சுயமா சிந்திக்க தெரிஞ்சா, இன்னமும் தமிழ் ஈழ கனவோடு இருப்பினமோ?

    என்ன இருந்தாலும், புலிகளுக்கு பெரும் பின்னடைவும் என்பது மட்டும் உண்மை….
    ஆனாலும் தலைவர் தனிய தப்பினலே போதும், அவர் மீண்டு வருவார் எண்டு கன சனம் நினைக்குது….
    தலைவர் மேஜிக் ஏதாவது செய்வார் எண்டு ஏங்கி கிடக்குதுகள்…

  3. Now you diaspora burn all LTTE flags and put that ash on your idiotic foreheads.

  4. மண்டியிட மாட்டான் வீரத்தமிழன் எங்கள் காவல்தெய்வம் prabaharan….. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. யாரும் நம்பவேண்டாம்….
    இது முடிவு அல்ல . புது புரட்சி இன் ஆரம்பம்மே மனம் தளராதே தமிழ் இனமே.

  5. i dont know why people like thamilan this still alive you, fool it is over prabha wil come on your day dream until then have a hope

  6. ஒருவேளை… இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது மாதிரி… பிரபாவும் உயிர்த்தெழுவான் என மூட நம்பிக்கையோடு காத்திருக்கும் புலன்பெயர் புலிகள்!

  7. நக்கீரன் தெரிஞ்சோ தெரியாமலோ… நீரும் தலைவர் எந்ற்று தான் குறிப்பிடுகிறீர்.. very good. eelam tamils has only one leader that is prabakaran.. he is still alive….

  8. ha ha ha.. no man! he is not for all tamils the leader. We are not so fool as you.. He is a humans killer. Boody!

Leave a Reply

Previous post பிரபாகரன் கொலை: முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் கருத்துகள்
Next post பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..