பிரபாகரன் கொலை: முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் கருத்துகள்

Read Time:3 Minute, 24 Second

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களின் கொலை தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளைக் கீழே தருகிறோம். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெரல் சரத் பொன்சேகா: முப்பது வருட காலமாகவிருந்த புலிப் பயங்கரவாதத்தை நாம் பூண்டோடு அழித்துள்ளளோம். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை இப்போது முடிவடைந்து விட்டது. கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களின் 300 சடலங்களிடையே பிரபாகரனின் சடலமும் இருக்கும். இந்தச் சடலத்தை இனங்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நாட்டில் தொடர்ச்சியாகப் பேரழிவை ஏற்படுத்தி வந்த பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. விமானப் படைத் தளபதி எயார்மார்ஷல் ரொஷான் குணதிலக: மாவிலாறிலிருந்து ஆரம்பமான இராணுவ நடவடிக்கை இன்று பூர்த்தியடைந்து விட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். அவரின் சகாக்களும் கொல்லப்பட்டு விட்டனர். சுமார் மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இராணு நடவடிக்கை இன்று பூர்த்தியடைந்து விட்டது. தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளைத் தேசத்திலிருந்து பூண்டோடு ஒழித்து விட்டோம். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட: இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த யுத்தம் தீர்க்க தரிசனமிக்க அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகக் கூண்டாக ஒழிக்க முடிந்தது. எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் சகல பலன்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இதில் எவ்வித சந்தேகமுமில்லை.எல்ரிரிஈ பயங்கரவாதம் என்ற பெயரை இலங்கைத் தீவிலிருந்து ஒழித்து விட்டோம.; இவர்கள் எவரும் தப்பியோட கடற்படை இடமளிக்கவில்லை. இவர்கள் அனைவரையும் கொலை செய்து விட்டோம். பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண: இலங்கை தேசத்திலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டக் கூடிய ஒரு சூழல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் உருவாக்கப்பட்டு விட்டது. பயங்கரவாதம் என்பதனை இலங்கைத் தேசத்திலிருந்து ஒழித்து விட்டோம். இந்த வெற்றி வரலாற்றுச் சாதனைமிக்க வெற்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post End Of LTTE And Prabhakaran – Wanni Operation (Tamil Version) 18 May 2009 -VIDEO-
Next post பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..