பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?

Read Time:4 Minute, 22 Second

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. மோதல்களில் கொல்லப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க இடைநிலை தலைவர்களின் உடல்களே தமக்குக் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது நடவடிக்கைகளின்போது பிரபாகரன் உயிருடனோ அன்றி இறந்த உடலாகவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று ஏ.எஃப்.பி. செய்திச் சேவைக்கு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹனுகல்ல தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பரவியிருக்கும் வதந்திகளை இதன்போது அவர் மறுத்துள்ளார். “பிரபாகரன் தொடர்பான எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை” என்று லக்ஸ்மன் ஹனுகல்ல ஏ.எஃப்.பி.யிடம் தெரிவித்தார். வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த நிலப்பரப்பை இராணுவம் வேகமாகக் கைப்பற்றிவரும் நிலையில், பிரபாகரன் மூத்த தளபதிகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவியுள்ளன. வன்னியில் தமது முகாம்களில் ஒன்றில் இருந்தவாறு அதனை குண்டுவைத்து தகர்த்து புலிகளின் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை அரசியல், இராணுவ விமர்சகர் ஒருவர் நேற்றுத் தகவல் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிரபாகரன் இறந்து விட்டார் என்ற வதந்திகள் வேகமாகப் பரவியுள்ளது. எனினும், இந்த ஊகங்கள் எதனையும் களத்தில் மோதல்களில் ஈடுபட்டுவரும் படைத்தரப்பினரோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை மட்டுமே பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

ஆயுதங்களைக் கைவிடத் தயார்?

இதேவேளை, படைத்தரப்பின் முற்றுகை கடுமையாக இறுகியுள்ள நிலையில், மோதல்களில் சிக்குண்டுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக தமது ஆயுதங்களை மௌனமாக்கத் தயார் என்று விடுதலைப் புலிகள் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று விடுத்துள்ளனர். புலிகள் ஆயுதங்களைக் கைவிடத் தயார் என்று அறிவித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

“மோதல்கள் ஒரு கசப்பான முடிவுக்கு வருகின்றன” என்று, விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செ.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புலிகள், சுமார் மூன்று தசாப்தகாலமாக தாம் முன்னெடுத்துவந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிடத் தயாராகிவிட்டமை தெளிவாவதாக இந்திய ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான நாராயணசுவாமி அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?

  1. “எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது என சுடலை ஞானி கே.பி தெரிவித்துள்ளார்.

    “கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமா?” என பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

  2. தமிழ் மக்கள் சோர்வடையவிலலை , இன்னும் புலத்தில் போராடுவோம். தமிழீழ விடுலை அண்மித்து விட்டது. மூன்றாம் தர்ப்பு சமாதான படைகள் வடகிழக்கில் நிருத்த படல் வேண்டும். கெதியா எல்லாம் நல்லதே நடக்கும். இன்னும் விடுதலைபுலிகள் மட்டுமே எங்கட தலைமை. தமிழ் மக்கள் துடர்ந்து போராடுங்கள்.

  3. நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும் !!!
    தந்துதவுங்கள் பை நிறைய இன்று !!!!!!!
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்?????

  4. புலன்பெயர் தமிழரின்,
    ஜெயலலிதா அம்மையார் காப்பார் எனும் இனிய கனவு நேற்றையோடு போனது…
    அமெரிக்கா தமிழீழம் எடுத்துத் தரும் எனும் இனிய கனவோடு படுத்துறங்குங்கள்…
    நாளைய விடியல்களில் மகிந்தாவின் ஆட்சியில் விழித்தெழுவீர்கள்…

    இதுவோர் கசப்பான உண்மை!

Leave a Reply

Previous post ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..
Next post படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..