முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள், மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

Read Time:1 Minute, 55 Second

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் வரதராஜா, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்!!!
Next post புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்த புலிகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்..!!!