வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??

Read Time:4 Minute, 38 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து முன்கூட்டியே இலங்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார். அவர் நாளை மறுதினம் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாளை காலையே அவர் நாடு திரும்பவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியிருந்தார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்னெப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இறுதியில் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன் எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த ஒரு நாட்டின் தலைவராக தான் தாயகம் திரும்பப்போவதாகவும் அப்போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜோர்தான் நாட்டில் இடம்பெற்ற ஜீ-11 நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பயணத்தினை இடையில் நிறுத்திக்கொண்டு நாளைகாலை நாடு திரும்புகின்றார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதிப்பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஜனாதிபதியின் பயணம் இடையில் நிறுத்தப்பட்டு நாடு திரும்புகின்றார். இதன்நோக்கம் புலிகள் முற்றாக தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள் என செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் மேற்படி வெற்றிதொடர்பான செய்தியை வெளியிடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் பயணம் இடையில் நிறுத்தப்பட்டு நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று முக்கிய அரசியல்வாதியொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதேவேளை புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. பாதுகாப்புத் தரப்பினரோ அன்றில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் எவருமே இச்செய்தியை உறுதி செய்யவுமில்லை மறுக்கவுமில்லை. மேற்படி செய்திகள் வெகுவேகமாக பரவிவருவதை அடுத்து நாட்டின் பலபகுதிகளிலும் இன்று மாலை முதல் பட்டாசுகள் வெடிக்கவைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் தேசிய கொடியினை தமது வீடுகளிலும் கடைகளிலும் பலர் ஏற்றிக்கொண்டும் உள்ளனர். இதற்கு மேலாக நாளையதினம் விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை ஒன்றினை பிரகடனப்படுத்துவார் எனவும் பரபரப்புச் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. ஆனாலும் உத்தியோகபூர்வமாக எவரும் இச்செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.
Thanks.. ILAKKU.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

13 thoughts on “வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??

  1. தற்கொலை தாக்குதல் தலைவன் தற்கொலை

  2. தற்கொலை தாக்குதல்களுக்கு எம்பிள்ளைகளை அனுப்பி பல்லாயிரக்கணக்கான வரை பலி கொண்ட திண்டு வளைந்து நீந்தி அனுபவிச்ச தலைவர்கள் தம் பிள்ளைகளையும் மனைவிமாரையும் கடைசி இரவு வரை தம் அருகில் வைத்திருந்து விட்டு இலங்கை இராணுவத்திடம் அவர்களை ஒப்படைத்து விட்டு
    இராணுவத்துடன் தாம் மோத பயந்து தற்கொலை செய்து போராட்ட வாழ்கையை முடித்தி கொண்டனர்.

    சுபம் சுபம்

    முற்றும்

  3. நம்ப முடியாத நியூஸ்… நடத்திருக்க வாய்ப்பில்லை..
    கடைசி தமிழன் வன்னியில் உயிரோடு இருக்கும் வரை எமது போராட்டம் ஓயப்போவது இல்லை…
    அடடா,,, தலைவர் தற்கொலை செய்யப்போவது இல்லை… கடைசி தமிழனும் இல்லாவிட்ட தப்ப வழியில்லையே, அப்படி நினைக்க வேண்டாம்….

    ஒரு தமிழன் உயிரோடு இருந்தாலும் அவனுக்காக தமிழ் ஈழம் பெற போர்ராடுவோம்…

  4. Thambiah Sabarutnam தற்கொலை
    சுபம் முற்றும்.

  5. சூசை இராணுவத்திடம் பிடிபட்டு உள்ளான். வெளி நாட்டுக்கு சட்ட லைட் தொலை பேசியில் பிணக் கணக்கு சொல்லி பிலிம் காட்டிய டாக்டர்மார் பாட்டுபாடி உசுப்பேத்தி விட்ட சாந்தன் உட்பட பல பாடகர்கள் பல புலி கேணல் மார் எல்லாம் இராணுவத்திடம் பிடிபட்டு போனார்கள். இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து பிரபாகரன் பொட்டு மற்றும் பலர் தற்கொலை செய்து விட்டனர். மதிவதனியும் பிள்ளைகளும், தமிழ் செல்வனின் மனைவியும் புதிய காதலனும், சூசையின் மனைவியும் பிள்ளைகளும், இன்னும் பல புலி தலைவர்களின் குடும்பங்களும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்து நல்ல பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தப்பி வரும்போது மட்டும் பின்னாலை சுடுவதற்கு ஒரு புலியும் இருக்கவில்லை.
    எம் பிள்ளைகளை தற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பும் போது அவர்களுடன் கடைசியாய் சாப்பிட்டுவிட்டு படுத்துதூங்கின பயந்தாங்கொள்ளிகள் பேடிகள் இராணுவம் சுற்றி வளைத்ததும் பயத்தில் தற்கொலை செய்து குத்தகைக்கு எடுத்த போராட்டத்தை முடித்து கொண்டார்கள்.
    புலிகளின்தாகம் புலன்பெயர்ந்த தமிழ்ஈழத்தாயகம்!
    ஸ்டாப் சுயிசைடு!

  6. ஐயோ, அப்ப அவன் உயிரோட பிடிபட மாட்டானா? தயவு செய்து அவனையும் பொட்டனையும் உயிரோட பிடிக்க வெணுமெண்டு, கும்பிடுங்கோ..

    அவர்களது வாயாலேயே, செய்த அட்டூழியங்கள், அராஜகங்களை சொல்ல வைக்கவேணும்.

    please…..

    அல்லது, இந்த புலிப் பினாமியள், அவனுக்கு கோயில் கூடக் கட்டுங்கள். போதாத்துக்கு, அவன்ர பேரைச் சொல்லி சொல்லி, இன்னும் அவன் சாகேல்லை எண்டு சொல்லியே, பிழைப்பு நடத்துங்கள்…..

    வெளிநாடுகளில எல்லாம், நாம் பயப்பிடுறம். உதுகள் என்ன வேணுமெண்டாலும் செய்யத் தயாரா இருக்குதுகள்…..

  7. ராஜபக்சேயுக்கு விமான நிலையத்தில் தீர மிக்க நாட்டு தலைவர் என உணர்ச்சி பூர்வமான வரவேற்பு!!
    பிரபாகரனுக்கு நரகலோக வாசலில் நரகத்திற்கு இதுவரை வந்தவரில் மிக மோசமானவன் என வரவேற்பு??

  8. Thambi Saba தற்கொலை,சுபம், முற்றும்.

  9. பிரிகேடியர் சவேந்திர டி. சில்வா ,Thambi Saba தற்கொலை,சுபம், முற்றும்.

  10. தமிழ் பேசும் இலங்கை மக்களுக்கு உண்மையான விடுதலையை பெற்று தந்த தீரமிகு தேசப்பற்று மிக்க தலைவனே வருக!! வருக!!
    அந்நிய நாடுகளுக்கு அடிபணியாது இலங்கை நாட்டையும் அனைத்து இலங்கை மக்களையும் உளமார நேசிக்கும் இலங்கை மண்ணின் தானைத் தலைவனே வருக!! வருக!!
    இன வெறியிலும் புலி வெறியிலும் இருப்பவர்கள் உங்களை புரிந்து உங்கள் பின்னால் அணி திரளும் காலம் வெகு தூரத்தில் இல்லை !!!!!

  11. மக்களை இதயபூர்வமாக நேசிக்கும் தென்னிலங்கையின் ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்பது உலகறிந்த உண்மை.சுதந்திர இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு, அரசியல் தீர்வொன்றின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்;ப்பதற்காக இதயசுத்தியுடன் செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் சமத்துவமான உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியான கொள்கை கொண்டவர். அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வெளிக்காட்டுபவர். அந்த வகையில் கடந்த மூன்றாண்டு கால ஜனாதிபதியின் அரசாங்கத்தின் கீழும், அதற்கு முந்திய காலகட்டங்களில் தனிப்பட்ட ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ எனும் மனிதாபிமானியாலும் தமிழ் மக்களுக்கு ஆற்றப்பட்ட சேவைகளை சற்று சீர்தூக்கிப் பார்ப்பது சாலப் பொருந்தும்.

    1970ம் ஆண்டில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் காலடி எடுத்து வைத்த காலம் தொட்டு பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக படிப்படியாக உச்சத்தை எட்டிக் கொண்டிருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்களைத் தன்னுடன் அரவணைத்துச் செல்ல ஜனாதிபதி தயங்கியதில்லை. சிறுபான்மைச் சமூகத்தவர்களை தனது பணியாளர்கள் மத்தியில் கௌரவமான அந்தஸ்தில் வைத்து அழகு பார்க்க மறந்ததில்லை.

    இவ்வாறாக கடந்த நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் தமிழ்-முஸ்லிம் மக்களின் இன்ப, துன்பங்களில் பங்குகொண்டு, அந்த மக்களுடன் மனப்பூர்வமாக நேசம் பாராட்டி வந்ததன் காரணமாகவே ஏராளமான நெருக்குதல்களின் மத்;தியிலும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்துமளவுக்கு ஜனாதிபதி துணிச்சலுடன் செயற்படுகின்றார். போர் என்றால் போர் என்று முரசறைந்தவர்களுக்கு மாற்றாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினம் எனும் மரத்தைச் சுற்றிப் படரும் கொடியாக கற்பிதம் செய்தவர்களை விட மாறுபட்டவராக, சமாதானத்துக்கான போரை முன்னெடுத்தவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவராக பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் வேறு என்பதை இதயபூர்வமாகப் புரிந்து வைத்துள்ளார். இவற்றுக்கெல்லாம் காரணம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று ராஜபக்ஷ பரம்பரையின் சிறுபான்மைச் சமூகங்களுடனான தோழமை மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷ எனும் மானிடநேயனின் மகாத்மியம் பொருந்திய பண்புகளும் தான் என்றால் அது மிகையல்ல.

    இலங்கை அரசியலில் ராஜபக்ஷ பரம்பரையானது காலடி எடுத்து வைத்த காலகட்டத்திலிருந்தே சிறுபான்மை இன மக்களின் நண்பர்களாகவே செயற்பட்டுள்ளது. டீ.எம். ராஜபக்ஷ தொடக்கம், டீ.ஏ. ராஜபக்ஷ, லக்ஷ்மண் ராஜபக்ஷ, ஜோர்;ஜ் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ என அனைவரும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பால் கரிசனை கொண்டவர்களாகவும், அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றவர்களாகவுமே இருந்துள்ளார்கள். தமிழ்-சிங்கள- முஸ்லிம் மக்களின் சகோதரத்துவ மற்றும் நட்புறவுக்கான ஒரே அரசியல் குடும்பம் ராஜபக்ஷ பரம்பரை தான் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுமளவுக்கு ஜனாதிபதியின் குடும்பம் சிறுபான்மைச் சமூகங்களுடன் இரத்த உறவைப் பேணி வந்துள்ளது.
    அவற்றுக்கு முத்தாய்ப்பாய் மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் ராஜபக்ஷவின் மனைவியார் யாழ்ப்பாணப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்ப் பெண்ணாக இருந்தார். 1950ம் ஆண்டுகளின் காலகட்டங்களில் சிங்கள-தமிழ் இன முரண்பாடு தீவிரமடையத் தொடங்கிய காலகட்டத்தி;ல் யாழ்ப்பாண பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தமிழ் மாதுவை தமது குடும்பத்தில் இணைத்துக் கொள்வதற்கு எந்தவொரு சிங்களக் குடும்பமும் தயக்கம் காட்டும் சூழலே நிலவி வந்தது. அவ்வாறான சூழ்நிலையின் மத்தியிலும் தமிழ்- சிங்கள நல்லுறவை வலுப்படுத்தும் வண்ணமாக சிங்கள மக்கள் அதிபெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் ராஜபக்ஷ பரம்பரை அந்தத் துணிகரமான செயற்பாட்டைக் கையாண்டு தமிழ்-சிங்கள நல்லுறவின் பால் தாம் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிக்காட்டியது.
    நிகழ்காலத்தில் கூட ஜனாதிபதி அவர்களின் பெறாமகளான பாராளுமன்ற உறுப்பினர் நிரூபமா ராஜபக்ஷ தமிழ் இனத்தவர் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது மட்டுமன்றி, ராஜபக்ஷ குடும்பத்துடனான பந்தத்தைத்தையும் தொடர்ந்து பேணி வருவதிலிருந்து ஜனாதிபதியின் குடும்பம் தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் சிநேகபூர்வ, இரத்தபந்த உறவி;னை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் தமது சிறுபராயம் முதலே தமிழ் மக்கள் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்திருக்கின்றார். அவர் சட்டக் கல்லூரியில் பயின்ற காலத்தில் தமிழ் மாணவர்களுடன் கலந்து பழகியது மாத்திரமன்றி, சட்டக் கல்லூரியின் விடுமுறை நாட்களில் மறைந்த அமைச்சர் ஜெயராஜையும் கூட்டிணைத்துக் கொண்டு ஏனைய தமிழ் மாணவர்களுடன் யாழ்.தேவி மூலமாக யாழ்ப்பாணம் சென்று வருவதை அன்னார் ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். யாழ்ப்பாண ஒடியற் கிழங்கும், காரை நகர் கடற்கரையும் ஜனாதிபதியின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் பசுமையான நினைவுகளாகும். அடிக்கடி அதனை நினைவுகூர்ந்து மகிழ்வது அவரது வழக்கமாகும். அந்த வகையில் தமிழ் மக்களை மாத்;திரமன்றி தமிழ் மக்கள் வாழும் மண்ணையும் நேசிக்கும் மகத்தான மனப்பாங்கு ஜனாதிபதி அவர்களிடம் மாத்திரமே காணப்படும் தனிப்பெரும் குணாதிசயமாகும்.
    2005ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின் போது நிலவிய அசாதாரணமான சூழ்நிலையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார். அந்தப் பயணத்தை அன்னார் உறவுகளை நாடிய பயணமாகவே அன்று குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால் இன்றை வரையான நீண்ட அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமிருந்து அவ்வாறான எதுவித நல்லெண்ண சமிக்ஞைகளையும் காணக் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக பொதுசன ஐக்கிய மக்கள் முன்னணியினால் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாக முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுப்பொதியை (03.08.2000) பாராளுமன்றத்தினுள்ளேயே எரித்த அசிங்கமான அரசியல் வரலாறு அவருக்குண்டு.

    அதற்கு மேலாக 1983ம் ஆண்டில் அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரத்தில் ரணிலுக்கும் பங்கிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் ரணில் அரசாங்கத்தின் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி, அவரது மாமனார் உறவுக்காரரான ஜே.ஆர்;. ஜயவர்த்தன தான் அன்றைக்கு நாட்டின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார். அப்படியான கட்டத்தில் ரணில் ஒரு சாதாரண தலையீட்டைச் செய்திருந்தாலே அந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் அவலங்களையும், படுகொலைகளையும் பார்;த்துக் கொண்டு மௌனமாக இருந்தார்.

    அதற்கு முன்பு 1981ம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமான அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது ரணிலும் அமைச்சராகச் செயற்பட்ட அதே அரசாங்கம் தான். ரணில் போன்றோரின் பலமான ஆதரவுடேனேயே யாழ்ப்பாணப் பொதுநூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேற்கண்ட செயற்பாடுகளில் ரணிலின் பங்களிப்பு இல்லாதிருந்தால் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை தானும் வெளியிட்டிருப்பார். ஆனால் அப்படிச்செய்யவில்லையே.

    ரணில் அமைச்சுப் பதவி வகித்த அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ அவர்கள் தான் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்பு கலவரத்தின் பின் சுமார் 11 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதிலும் அந்தக் காலகட்டத்தி;ல் ரணில் இரண்டு வருடங்கள் மட்டில் பிரதமராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் மனப்பூர்வமான தேவைப்பாடு இருந்திருந்தால் அவரால் அதனைச் செய்திருக்க முடியும்.

    அதுமட்டுமன்றி 1977ம் ஆண்டு ரணில் அங்கம்வகித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சி அமைத்ததன் பின்னரான (1993) வரையான காலத்தில் வரலாற்றில் தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறான (1977, 1981, 1983 ) ஆகிய மூன்று பாரிய இனக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளான ஆயுதக்குழுவினரின் பின்னால் அணிதிரள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.

    இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததன் பின்னரேயே இலங்கையில் இனக்கலவரம் என்னும் கொடிய நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்டது என்பதனை தமிழ்மக்கள் மறுக்கமுடியாது

    1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைத்ததுமன்றி அதன் போது வீடிழந்த மக்களுக்கென அருணோதய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் சீத்தாவக்கபுர மற்றும் கல்கிஸ்ஸையின் படோவிற்றை பிரதேசங்களில் வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்கள் மீதான தனது தனிப்பட்ட கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

    குருநகரிலுள்ள தேவாலயம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியின்போது (05.04.1993) விமானத் தாக்குதல்மூலம் சேதமாக்கப்பட்டது. பின்னர் பயங்கரவாதிகளின் தூண்டுதலின்பேரில் (04.07.2005) இராணுவத்தினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எவிவிடப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தின்போது குருநகரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் தமிழ் இளைஞர்களுக்கான பாரிய சித்திரவதை முகாமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கதுதமிழ் ரணில் பலமிக்க அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு-தெற்கின் உறவுப் பாலமாக விளங்கிய யாழ்.தேவி புகையிரதப் பயணத்தை அரசாங்கம் இடைநிறுத்தியது. அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கென எதுவித சேவையும் ஆற்றியிருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மாணவரின் கல்வி நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்றைக் கூட நடாத்தியிருக்கவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களை மரத்தைச் சுற்றிப்படரும் கொடிக்கு ஒப்பிட்டுப் பேசிய காலகட்டத்தில் ரணில் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் மறுதலித்துப் பேசியதில்லை. அதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு கருத்தை ஆமோதிக்கின்றார் என்பதாகத் தானே அர்த்தப்படுகின்றது?

    ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றுக்கு தமிழ் இனத்தவர் ஒருவரை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ரணில் பதவியேற்கும் காலத்தில் கட்சியின் பொருளாளராகச் செயற்பட்டவர் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரபிதாவான கே.கணேசலிங்கம் ஆவார். ஆனால் ரணில் கட்சித் தலைமையை ஏற்றபின் கணேசலிங்கம் ஒதுக்கப்பட்டார். கடைசியில் அவர் மனம் வெறுத்து,கட்சியை விட்டே விலகி பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார்.

    ஆனாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புளொட் அமைப்பின் சித்தார்த்தன் அவர்களை தனது அமைச்சின் ஆலோசகராக நியமித்து, அவருக்கென வாகன வசதியும் செய்து கொடுத்திருந்தார். அதன் மூலமாக அவரது மக்கள் சேவைகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது மாத்திரமன்றி, தனது அமைச்சின் சேவைகளை தமிழ்ப்பிரதேசங்களில் செயற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரையே தேர்ந்தெடுத்துமிருந்தார். அதுதான் ரணிலுக்கும் ஜனாதிபதிக்குமுள்ள வித்தியாசமாகும்.

    இவ்வாறான பின்புலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னான கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்து சுருக்கமானதோர் கவனத்தைச் செலுத்தினால் அதனைப் பல்வேறு தலைப்புகளின் விலாவாரியாகப்; பிரித்து நோக்கலாம்.

    ஜனாதிபதி அவர்கள் பதவியேற்றவுடனேயே அதுவரை காலமும் இழுபறியில் கிடந்த மலையக ஆசிரியர் நியமன விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்து, சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மலையக, இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கி வைத்தார். அதன் மூலம் மலையகக் கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

    அதற்கடுத்ததாக மஹிந்த சிந்தனையின் வாக்குறுதிகளில் ஒன்றாக, ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் பேரில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பின் போது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்,யுவதிகள் ஆசிரிய நியமனங்களையும் மற்றும் அபிவிருத்தி உதவியாளர் நியமனங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

    வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடெங்கிலும் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நிரந்தர நியமனத்தின் போதும் இலங்கையெங்கிலுமிருந்து சுமார் எட்டாயிரம் தமிழ் இளைஞர்,யுவதிகள் தொண்டர் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றுக்கு மேலாக பத்தனை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு, சிறந்த முறையில் அவற்றை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஜனாதிபதி அவர்களின் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன.

    ஊவா வெல்லஸ்ஸை பல்கலைக்கழகத்தின் வளாகமொன்றை ஹட்டன் நகரில் நிறுவித் தருவதான மஹிந்த சிந்தனை வாக்குறுதியின் பிரகாரம் அதனை நிறைவேற்றிக் காட்டினார். அதன் மூலமாக இன்றைக்கு ஹட்டன் பிரதேச கல்வி நடவடிக்கைகளில் ஒரு உத்வேகம் பிறந்திருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இது வரைகாலமும் புறக்கணிக்கப்பட்ட மலையகப் பிரதேசங்கள் அதன் மூலமாக மஹிந்த சிந்தனையின் நிழலில் தளிர்விட்டுத் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை சீராக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தமை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நி;ர்வாக செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கு வழியேற்படுத்தியமை மற்றும் குறித்த பல்கலைக்கழகங்களின் பௌதீக, ஆளணி வளங்களில் நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்தமை, விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு பல்கலைக்கழக வளாக அந்தஸ்து பெற்றுக்கொடுத்தமை என்பன வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேச கல்விச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டத் துணை செய்துள்ளன. இவ்வாறாக மஹிந்த சிந்தனையின் நிழல் பரவி, தமிழர் பிரதேசமெங்கும் கல்விச் செயற்பாடுகளில் ஒரு புதுயுகம் பிறந்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது.

    இவற்றுக்கு மேலதிகமாக இலங்கைத் திருநாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக தென்னிந்தியாவுக்குத் தப்பியோடி அகதிகளாக வாழும் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கென கல்விப் பொதுத்தராதரப் பத்திர பரீட்சைகளை இந்தியாவின் அகதி முகாம்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாத்திரமேயாகும். அவ்வாறான ஒரு சிந்தனை இது கால வரை எந்தவொரு சிங்களத் தலைவருக்கும் உதிக்கவுமில்லை. எந்தவொரு தமிழ் அரசியல் தலைமையாலும் அவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கப்படவுமில்லை. அந்த வகையில் தமிழ் மக்களும் இந்நாட்டின் கௌரவமான பிரசைகள் என்பதை செயலளவில் நிரூபிக்கும் வண்ணமாக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட குறித்த நடவடிக்கை என்றென்றும் நமது மனங்களில் நன்றி பாராட்டத்தக்கதாய் நினைவு கூரப்பட வேண்டும்.

    அதனைப் போன்றே மோதல்கள் காரணமாக உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களின் கரிசனை வெளிப்பட்டுள்ளது. மாவிலாற்றில் தொடங்கிய புலிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையின் போது கிழக்குப் பிரதேச மக்கள் வாகரை, கதிரவெளிப் பிரதேசங்களுக்குப் பலாத்காரமாக இடம்பெயர வைக்கப்பட்டு புலிகளினால் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தனர். அதன் காரணமாக அக்கால கட்டத்தில் நடாத்தப்பட்ட புலமைப் பரிசிற் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் என்பவற்றுக்கு முகம் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டது. அந்த மாணவர்களின் நலன் கருதி குறித்த பரீட்சைகளை கிழக்கின் மனிதாபிமான நடவடிக்கை முற்றுப் பெற்றதன் பின் நடாத்துவதற்கு உத்தரவிட்டவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான்.

    அண்மையில் கூட வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியிலிருந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக புதிய பாடசாலைகளை நிர்மாணித்துக் கொடுத்தது தொடக்கம் அப்பகுதியிலுள்ள பாடசாலைகளில் குறித்த மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி;க் கொடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரிய அதிகாரிகளுக்குப் பணி;ப்புரை விடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மக்கள் இடம்பெயர்ந்து வாழுகின்ற போதும் அவர்களி;ன் பிள்ளைகளி;ன் கற்றல் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எதிர்கால தமிழ் சமூகத்தின் தலைவர்கள் உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் சீராக முன்னெடுக்கப்படுகின்றன.

    இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற் போன்று அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலையீட்டினை அடுத்து வன்னியின் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு விமான டிக்கட்டையும், தேவையான உபகரணங்களையும் வழங்கி அவர்களது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதிலும் ஜனாதிபதி அவர்கள் நேரடிக் கவனம் செலுத்தியிருந்தார். ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பயங்கரவாதிகளின் ஆதரவுத் தளமாக செயற்பட்ட உண்மை தெரிந்திருந்தும், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் விடயத்தில் தனிக் கரிசனை காட்டிச் செயற்பட்ட ஒரே தலைவன் இந்த மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான்.

    அத்துடன் குறிப்பிட்டுக் கூறத்தக்கதான இன்னொரு விடயமாக கொழும்பில் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடசாலை நெருக்கடிக்குத் தீர்வு காணுமுகமாக கொழும்பின் மத்தியில் இந்து ஆண்கள் பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். இவற்றோடு மத்திய அரசாங்கத்தின் பிரதிக் கல்வி அமைச்சராக செயற்திறன் மிக்க அரசியல்வாதியான எம். சச்சிதானந்தம் அவர்களையும், முன்னாள் மத்திய மாகாண சபையில் தமிழ்க் கல்விக்கு அரும் சேவையாற்றிய அருள்சாமி அவர்களை தமிழ்க் கல்வி அமைச்சராகவும் நியமித்ததன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மூலமாகவே தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளார்;;;;;;;. அதன் உச்ச கட்டமாகவே இம்முறை மத்திய மாகாண சபையில் போனஸ் ஆசனம் மூலமாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அவர்களை மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக நியமித்து மலையக கல்வி அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வழி செய்துள்ளார்;.

    யாழ்ப்பாணக் குருகுலத்தை தொடர்ச்சியாக இயங்க வைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் அலாதியான கரிசனை கொண்டுள்ளார். இப்படியாக ஜனாதிபதி அவர்கள் தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு நல்கியுள்ள பங்களிப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

    தொழில் வாய்ப்புகளை எடுத்துக் கொண்டால் அரச துறையில் வழங்கப்பட்ட முகாமைத்துவ உதவியாளர், சுகாதார முகாமைத்துவ உதவியாளர், மருத்துவத் தாதிகள், சுகாதார மருத்துவ மாதுகள், சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட பிற நியமனங்களின் போது கடந்த மூன்றாண்டு காலப் பகுதியில் சுமார் ஐம்பதினாயிரம் பேரளவிலான தமிழ் இளைஞர்;, யுவதிகள் அரச தொழில் வாய்ப்பைப்பெற்றுள்ளனர்.

    வாழ்க்கைத் தொழிற் துறைகளிலும் தமிழ் இளைஞர்;, யுவதிகள் தேர்ச்சி பெற வேண்டும் எனும் நோக்கில் ஜனாதிபதியினால்; சமூக சிந்தை கொண்ட பெ.இராதாகிருஷ்ணன் வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  12. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின் உருவாக்கப்பட்ட கருத்திட்டமான கிழக்கின் நவோதயம் உண்மையிலேயே இன்றைக்கு கிழக்கு மாகாணத்தில் நவ யுகம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது எனலாம். மூன்று தசாப்த கால யுத்தத்தால் சீரழிந்து போயிருந்த கிழக்கின் இயல்பு வாழ்க்கை இன்று வழமைக்குத் திரும்பியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு;ள்ளன. அரச நிர்;வாகம் செயற்திறன் மிக்கதாக மாற்றப்பட்டு மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

    நீண்ட காலமாக கைவிடப்பட்டு தரிசு நிலங்களாகப் போயிருந்த பயிர் நிலங்கள் இன்றைக்கு பச்சைப் பசேலென வயல் நிலங்களாக மாற்றம் பெற்றுள்ளன. மக்களின் உணவுத்தேவை மட்டுமன்றி பொருளாதார வளமும் அதன் மூலம் ஈடுகட்டப்படுகின்றது. நீண்ட காலத்தின் பின் கிழக்கு மாகாண மீனவர்கள் ஆழ் கடல் மீன்பிடித் தொழில் மூலமாக கூடிய வருமானத்தைப் பெறத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் யுத்தத்தின் காரணமான மனோ உளைச்சலிலிருந்து விடுபட்டு நிம்மதியான சூழலில் கல்வியைத் தொடர்கின்றனர். அதன் பலாபலனை கடந்த உயர்தரப் பரீட்சையின் கலைப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றுச் சித்தியடைந்த கிண்ணியா மாணவி ஜெய்னுலாப்தீன் பாஹிமா மெய்ப்படுத்தியுள்ளார். இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து எண்ணற்ற பாஹிமாக்கள் தோன்றுவதற்கான சூழலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

    இவற்றோடு இணைந்ததாக கிழக்கில் பல புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேகப் பாதைகள் உருவாக்கப்பட்டு போக்குவரத்துத் துறையில் ஒரு புதுயுகம் மலர்ந்துள்ளது. பாதைகளில் புத்தம் புதிதான இ.போ.ச. பஸ்கள் ஓடுவதன் மூலம் மக்களின் போக்குவரத்துத் தேவை போதுமான அளவில் ஈடுகட்டப்படுகின்றது. இவற்றிற்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு- கொழும்பு கடுகதி புகையிரத சேவையான உதயதேவி புகையிரத சேவை அண்மையி;ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – திருமலைக்கு இடையிலான இரயில் பஸ் சேவைகள் மக்களின் போக்குவரத்துக்கான தேவைகளைக் கருதி வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வாகரையி;ல் ஆரம்பித்து கதிரவெளி, வெருகல் ஊடாகச் செல்லும் பாதையும், கிண்ணியா இறால்குழி ஊடான பாதையும் புனரமைக்கப்பட்டு மட்டக்களப்பு-திருமலை தரைவழிப்பாதை மீண்டும் செயற்படுவதற்கான காலம் கனிந்துள்ளது.

    கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக பிரதேசத்தின் அபிவிருத்தி மேம்படுவது மாத்திரமன்றி அங்குள்ள மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வழியும் ஏற்பட்டு;ள்ளது. நிலாவெளி, பாசிக்குடா, அறுகம்பை பிரதேசங்கள் இன்று புத்தெழில் பெற்றுப் பொலிவுடன் காட்சியளிப்பதன் காரணமாக கிழக்கு மாகாணம் நோக்கிய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    நீண்ட நெடுங்காலமாக கவனிப்பாரற்று மூடப்பட்டிருந்த கந்தளாய் மற்றும்; ஹிங்குராணைச் சீனித் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. வாழைச்சேனைக் கடதாசி ஆலை மறுசீரமைக்கப்பட்டு, மீள இயங்குகின்றது.

    கிழக்கைப் போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வதற்கென ஏராளமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் வகையில் முன்னெடுப்பதற்கென வடக்கின் உள்ள+ராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் அதன் பிற்பாடு கூடிய கதியில் மாகாண சபைத் தேர்தலையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

    மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த யாழ். மாவட்டத்தின் வழுக்கையாற்றுத் திட்டத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன் மூலமாக யாழ்ப்பாண விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. அந்த விவசாயப் பசுமையின் பலனாய் விளையப் போகும் தானியங்களை நாட்டின் தெற்குப் பகுதிக்கு எடுத்துச் சென்று விற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இப்போதைக்கு ஏ-9 பாதை மீளத் திறக்கப்பட்டுள்ளது. யாருக்கும் கப்பம் கொடுக்காமல், எதுவித இடையூறுகளுமின்றி யாழ்ப்பாண விளைச்சல்கள் இனி வரும் காலங்களில் தெற்கில் விலை போகும் காலம் மலர்ந்துள்ளது.

    யாழ்ப்பாண மக்களின் விளையாட்டுத்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் பிரபல மைதானமான துரையப்பா மைதானம் மிக நவீனமயமான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. யாழ்;ப்பாண இளைஞர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் வகையில் அண்மைக்காலமாக அங்கு பல்வேறு கண்காட்சி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

    நீண்ட காலமாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த ஏ-9 பாதை மீளத்திறக்கப்பட்டு இப்போதைக்கு தரை வழிப்பாதை ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. அதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலை கணிசமாகக் குறைவடைந்து இவ்வருட புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு மேலாக யாழ்ப்பாண மக்கள் தமது உறவுகளுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வசதியாக கொழும்பிலிருந்து இராணுவ விமானங்கள் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்றாகும். மிக விரைவில் பொதுமக்களின் போக்குவரத்துக்கென ஏ-9 பாதை திறந்து விடப்படும்போது வட பிரதேச மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகள் முற்றாக நீங்கி விடு;ம். வெளி உலகத் தொடர்புகள் அற்றிருந்த யாழ்ப்பாண மக்கள் தெற்கிலுள்ள தமது உறவுகளுடன் கூடிக் குலாவவும்இ தெற்கு மக்கள் யாழ். மக்களுடனான தமது நேசங்களை மீளப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பேற்படப் போகின்றது.

    இவற்றுக்கு செங்கம்பளம் விரிக்கும் வண்ணமாக யாழ்.தேவி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் மூலம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலம் புனரமைக்கப்பட்டு நாட்டு மக்களுக்கிடையிலான விரிசல் அகற்றப்படும். நாட்டு மக்களுக்கிடையான புரிந்துணர்வு கட்டியெழுப்பப்படும். யாழ்.தேவி இரயில் பயணத்தை இடைநிறுத்தி ஐ.தே.கட்சி அரசாங்கம் துண்டித்த இன ஐக்கியம் மீண்டும் துளிர் விடும்.

    இதிலுள்ள இன்;னுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனி;ல் யாழ்.தேவி புகையிரத்தின் மீள் வருகைக்கென புனரமைக்கப்படவுள்ள யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை புனரமைக்கும் செலவை ஹம்பாந்தோட்டை மக்களின் பங்களிப்பின் மூலம் திரட்டிக் கொள்ள ஜனாதிபதி உத்தேசித்துள்ளார். வடக்காக இருந்தாலும்இ தெற்காக இருந்தாலும் நாமனைவரும் இலங்கைத் திருநாட்டின் ஒரு தாய் பிள்ளைகள் என்ற கருத்தை அதன் மூலம் செயற்பாட்டு ரீதியாக உறுதி;ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு மேலாக யாழ். தேவி புகையிரதப் பாதை புனரமைப்புத் திட்டத்திற்கென ஜனாதிபதி அவர்கள் தனது ஒரு மாதச் சம்பளத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    இத்திட்டங்களின் பலனை மக்கள் அனுபவிக்கும் வரை வழமை போன்று திருமலை ஊடான கப்பற் சேவையை தொடர்ந்து நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு மேலாக அவசர தேவைகளின் நிமித்தம் யாழ்ப்பாணம் செல்லவுள்ள மக்களின் வசதி கருதி புத்தாண்டு காலத்தில் இராணுவத்தினரின் போக்குவரத்து விமானங்கள் பொதுமக்கள் போக்குவரத்துக்கென உபயோகிக்கப்படவுள்ளன.

    வன்னியில் இடம்பெறும் மோதல்களினால் இடம்பெயரும் மக்களின் நலன்கருதி அரசாங்கம் தொடர்ச்சியான உணவு விநியோகத்தைப் பல சிரமங்களின் மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றது. அதனைத் தடுப்பதற்காக புலிகள் இயக்கம் ஒரு தடவை தாக்குதலையும் மேற்கொண்டு முயற்சித்துப் பார்த்தது. அதற்கு முன்பும் ஒரு தடவை யாழ்ப்பாண மக்களுக்கான உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்த கப்பலொன்றையும் தற்கொலைத் தாக்குதலொன்றின் மூலம் தகர்ப்பதற்கு புலிகள் முயற்சித்திருந்தனர். அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான பயணிகள் போக்குவரத்துக் கப்பலான ஜெற்லைனர் கப்பலையும் தகர்ப்பதற்கும் முயற்சித்திருந்தனர். ஆயினும் இவ்வாறான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கரிசனை காரணமாக அரசாங்கம் இதுவரை வடக்கிற்கான உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை தடைப்படாது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

    வடக்கில் தமிழ் மக்களின் மிக முக்கியமான நயினாதீவு நாகபூசணியம்மன் கோவில் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தும் ஜனாதிபதி நேரடிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதன் காரணமாக சுமார் ஒரு கோடியே ஐம்பத்;தி ஏழு இலட்சம் ரூபா செலவில் நயினாதீவு இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை ஜனாதிபதி ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அதற்கு மேலாக அப்பிரதேசத்தின் வீதிகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அதன் காரணமாக நயினை நாகபூசணி அம்மன் பக்தர்களுக்கு தமது வழிபாடுகளையும்இ ஆலய தரிசனம் மற்றும் யாத்திரை என்பவற்றை சிரமங்கள் இன்றி மேற்கொள்வதற்கான சூழல் ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கரிசனை மூலமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவற்றுக்கு மேலதிகமாக குறிப்பிடத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகளாக யாழ்ப்பாண சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமைஇ ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் தாம்போதி சமாதானப் பாலம் என்ற பெயரில் 167 கோடி செலவில் மீளமைக்கப்படுகின்றமை போன்ற நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம்.

    ஜனாதிபதியின் வழிகாட்டுதல் காரணமாகவும் ராஜபக்ஷ பரம்பரையின் தமிழ் மக்கள் மீதான நட்புணர்வு காரணமாகவும் யாழ்ப்பாணத்தி;ல் நீச்சல் தடாகமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மாணவர்களின் நலன் கருதி புலமைப் பரிசிற் பரீட்சைஇ க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை என்பவற்றுக்கான வழிகாட்டற் கருத்தரங்குகளையும் அவரது அமைப்பு நடாத்தி வருகின்றது. அந்த வகையில் ராஜபக்ஷ பரம்பரையின் எதிர்கால தலைமைத்துவமும் தமிழ் மக்கள் மீதான நேசவுணர்வுகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றது எனலாம்.

    இவற்றுக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் விசேட கவனத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கென உருவாக்கப்பட்ட தேசிய சக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்இ ஆசிய வங்கியின் கடனுதவியுடன் யாழ்ப்பாணத்தில் 25 கிராமங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் அந்த மக்களின் பிரஜாவுரிமையை இல்லாமலாக்கியது தொடக்கம் அந்த மக்களின் பல அவலங்களுக்கான மூல காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியே விளங்கியுள்ளது. ஆயினும் மஹிந்த சிந்தனையில் வாக்களிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த மூன்று வருட காலத்துக்குள் பெருந்தோட்டப் பிரதேசங்களில் நடைபெற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக மலையகப் பிரதேசங்களில் ஒரு புத்தெழுச்சி உருவாகியுள்ளது எனலாம்.

    மலையக வரலாற்றில் ஒரே தடவையில் ஆகக் கூடிய ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட நிகழ்வு இந்த அரசாங்கத்திலேயே நடந்துள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் மேற்கொள்ளப்பட்ட அந்த நிகழ்வின் மூலமாக சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மலையக இளைஞர்;, யுவதிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதற்கு மேலாக மஹிந்த சிந்தனையின் இன்னொரு வாக்குறுதியான பெருந்தோட்ட தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தின் முதலாம் கட்டத்தில் சுமார் அறுநூறு மலையக இளைஞர்;, யுவதிகளும் இரண்டாம் கட்டத்லும் அதனை ஒத்த அளவான இளைஞர்;, யுவதிகளும் தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று மலையக மக்களுக்கான அரச சேவை இணைப்பாளர்களாகப் பணி புரிந்து கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக மலையக மக்களுக்கு தமது விடயங்களை அரசாங்க அலுவலகங்களில் சுலபமாக நிறைவேற்றிக் கொள்ளத்தக்கதான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

    தோட்ட மக்களின் வருமானத்தைக் கருத்திற் கொண்டு அவர்களுக்குச் சலுகை விலையில் அரிசியை வழங்கும் திட்டமொன்றை ஜனாதிபதி அவர்கள் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக மலையக மக்கள் தமது வருமானத்துக்கேற்றவாறு வாழ்வதற்கான வாய்ப்பும், தேவையான போசாக்கைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது.

    மலையக மக்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அடுக்குமாடி வீடுகள் அமைக்கும் திட்டம் மஹிந்த சிந்தனையின் இன்னொரு வெற்றிகரமான பிரசவமாகும். இன்றைக்கு மலையகத்தின் பல பகுதிகளிலும் தோட்ட மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டு;ள்ளன. அதனுடன் இணைந்ததாக மலையகத்தின் பாதை வசதிகள், தோட்டக்குடியிருப்புகளுக்கான மின்சார வசதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் கணிசமான அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

    இவற்றுடன் இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக மஹி;ந்த சிந்தனை வாக்குறுதியின் பிரகாரம் மலையக மக்களுக்கான நேரடி தபால் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மலையக மக்களின் வாழ்வில் நிலவிய பெருங்குறையொன்று அதன் மூலமாக தீர்த்து வைக்கப்பட்டு;ள்ளது.

    அத்துடன் மலையக மக்கள் பண்டிகைகளின் போது அதனைச் சந்தோசமாகக் கொண்டாடுவதற்கான வகையில் பண்டிகைக் கால முற்பணம் மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை உயர்த்தப்படுவதில் அரசாங்கத்தின் ஈடுபாடு கணிசமானதாகும். அதற்கு மேலாக தற்போதைக்கு தேயிலைக்கான உச்சபட்ச விலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இறப்பர் மற்றும் தேயிலை என்பவற்றுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

    மேலும் மலையகத்தின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பான அமைச்சுப் பதவிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டு மக்கள் சேவைக்கான வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. அதன் மூலம் குறுகிய காலத்துக்குள் மலையகத்தின் அபிவிருத்திக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதில் மஹிந்த சிந்தனை பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    1983ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் கலேவெல இந்துக் கோயில் உள்ளிட்ட இன்னும் பல கோயில்கள் இப்போதைக்கு புனரமைக்கப்பட்டுள்ளன. கலேவெல இந்துக் கோயிலின் காணி கடந்த பல வருடங்களாக பெரும்பான்மையினச் சகோதரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அவர்களின் விசேட தலையீட்டின் காரணமாக அந்தக் காணி இப்போது மீண்டும் கோயிலுக்குக் கிடைத்துள்ளது. மாத்தளை மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சசிகரன் குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொள்வதில் வெற்றி கண்டார். இவ்வாறாக கடந்த மூன்றாண்டு காலப் பகுதிக்குள் மலையகத்தின் பல கோயில்களில் கும்பாபிஷேகமும், இன்னோரன்ன திருவிழாக்களும் விமரிசையாக நடைபெற்றுள்ளன. அதன் மூலம் சமய ரீதியான சேவைகளிலும் மலையக மக்களின் வாழ்வியல் மாற்றத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கூடிய கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

    மலையக மக்களுடைய அபிவிருத்திக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் முகமாகவே கடந்த மத்திய மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் பி. திகாம்பரம் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. மாகாண சபை கலைக்கப்படும் வரை அனைத்து வித வசதி வாய்ப்புகளையும் அனுபவித்து விட்டு, கடைசி நேரத்தில் மலையக மக்களின் துன்பங்களின் மூலகாரணியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். அவரைப் போலவே முன்னாள் ஜனாதிபதி ஆலோசகரான சதாசிவம் அவர்களும் கடந்த மூன்றாண்டு காலப்பகுதிக்குள் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் கட்சி தாவினார். மலையக மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்காக கடைசி நேரம் வரை அரசாங்கம் அவர்களுக்கான அனைத்து ஒத்தாசைகளையும் நல்கியிருந்தது. அவர்கள் கட்சி மாறப் போவதான தகவல் வந்த நிலையிலும் கூட அவர்களின் பதவிகளைப் பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. ஏனெனில் இருக்கும் வரை மக்களுக்கு ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்ற அரசாங்கத்தின் நல்லெண்ணமே அதற்கான காரணம்.

  13. கடவுளை கண்டவன் எவனுமில்லை பிரபாகரனை வென்றவென் எவனுமில்லை

Leave a Reply

Previous post புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!
Next post புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!