லண்டனிலும், பிரான்ஸிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்

Read Time:1 Minute, 45 Second

லண்டனிலும், பிரான்ஸிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் இருக்கின்ற சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலை நடத்தியவர்கள் கற்களை வீசி மையத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு சேதம் ஏற்படுத்தி தப்பிச் சென்றுவிட்டதாக அந்த வழிபாட்டிடத்தை சேர்ந்த பௌத்த மதகுருவான பிய்டஸி தேரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.அதேவேளை, கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றும் விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது..
Next post நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் சார்வார்தோட்டத்தில் படையினர்மீது தாக்குதல்