அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது..

Read Time:2 Minute, 39 Second

0000athirvuஅதிர்வு (athirvu) மற்றும் தமிழ்வின் (tamilwin) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும் அவர்களின் சடங்களில் இருந்து உடலுறுப்புக்கள் வெட்டி எடுக்கப் பட்டதாகவும் அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாகவும் படங்களோடு செய்திகளை வெளியிட்டு புலம்பெயர்ந்த தமிழரை மத்தியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருந்தன. இந்தப் படங்கள் குறித்து நேற்றைய (மே. 13) தினம் ஜிரிவி (GTV) முழு அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல உரையாடல்களை நிகழ்த்தி இருந்தது. இந்திய வைத்திய சாலை ஒன்றில் சடலகங்களை எவ்வாறு போஸ்மார்ட்டம் செய்கிறார்கள் என்பதை விபரிக்க ஒரு ஆங்கில இணையத்தளம் 17, ஏப்ரல் 2008 இல் வெளியிட்ட படங்களை `சுட்டு` மேற்படி தமிழ் இணையங்கள் ஒரு `கப்சா` செய்தியை வெளியிட்டுள்ளன. கீழ் உள்ள இணைப்புக்கு சென்று அதிர்வும் (athirvu.com) தமிழ்வினும் (tamilwin.com) ‘பொலநறுவையில் தமிழ் இளைஞர்களின் பொலி போடப்படுவதாக’ வெளியிட்ட புகைப்படங்களை அடையாங்கள் காணுங்கள்.
http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

சில காலத்துக்கு முன்னர், கிளிநொச்சியில் சிறையுள்ளதாகவும் அங்குள்ள கைதிகள் நிர்வாணமாக உள்ளதாகவும் வெளியான படங்கள் கூட பொய்யானவை என்பதை புரிந்து கொள்ள `கூகுள்` இணையத்தில் சிலமணிநேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த வகையான பொய்ப் பிரச்சார செய்திகள் வெளியிடும் யுக்தியால் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை `காப்பாற்றி` விடலாமென நினைக்கும் இவர்களை மட்டுமல்ல தமிழ் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஐயோ………
நன்றி ரெலோநியூஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; பிரிட்டிஷ் பாராளுமன்றில் பெரும் வாதப் பிரதிவாதம்
Next post லண்டனிலும், பிரான்ஸிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்