பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்
வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களு க்கும், உயர் ஸ்தானிகரால யங்களுக்கும் வழங்கப்படு கின்ற பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுக ளிடம் வேண்டுகோள் விடுத் திருப்பதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம நேற்றுத் தெரிவித்தார். தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்து இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகள் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டே இந்த வேண்டு கோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற நஷ்டஈடு வழங்கும் வைபவத்தின் முடி வில் ஊடகவியலாளரொ ருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். ஐக்கிய நாடு கள் சபையின் பிரகடனத்தின்படி வெளிநாடுகளில் பணிபுரியும் தூதுவர்களுக்கும், உயர் ஸ்தானிகர்களுக்கும் அவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அந்தந்த நாடுகள் இலங்கையின் தூதரகங்களுக்கும், உயர் ஸ்தானிக ராலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேவேளை மேற்கு நாடுகளிலுள்ள பெளத்த விகாரைகள் மற்றும் இலங்கை நலன் காக்கும் நிலையங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் தூதரகங்கள் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டதையடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த விகாரை மீது தாக்குதல் நடத்தியவர்களைத் துரிதமாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பிரான்ஸ் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறுகையில், லாபோர்ஜ் பெளத்த விகாரை மீது முகங்களை கறுப்பு துணிகளால் மூடிக்கொண்ட ஒரு குழுவினர் கடந்த ஞாயிறன்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தினால் விகாரையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. ஆனால் எவருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ இடம்பெறவில்லை.
இச்சம்பவத்தில் ஏழு பேர் அடங்கிய குழுவே ஈடுபட்டிருப்பதாகவும் இவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தான் பிரான்ஸ் உட்பட மேற்கு நாடுகளில் உள்ள பெளத்த விகாரைகள் மற்றும் இலங்கை நலனோம்பு நிலையங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களின் ஊடாக அந்தந்த அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Average Rating