கடற்புலிகள் மீது 7 தடவை தாக்குதல்: புலிகளின் 17 படகுகள் நிர்மூலம்; 100 புலிகள் பலி

Read Time:2 Minute, 14 Second

கடற்படையினர் கடந்த சில வாரங்களாக கடற்புலிகள் மீது ஏழு தடவை கடும் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் புலிகளின் 17 படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார். இதில் நூறு புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், சில படகுகள் கைப்பற்றப்பட்டு ள்ளதாகவும் கமாண்டர் தெரிவித்தார். தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (12); நடந்த செய்தியாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார். இதில் நூறு புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், சில படகுகள் கைப்பற்றப்பட்டு ள்ளதாகவும் கமாண்டர் தெரிவித்தார். தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (12); நடந்த செய்தியாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். கடலில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய கடற்படைப் பேச்சாளர், தாக்குதல் படகுகளில் வந்து இறுதிக் கட்டத்தில் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்தார். இரவு வேளைகளில் எதிரியைச் சரியாக இனங்காண்பது சிரமம்தான். ஆனால், பாதுகாப்பு வலயத்தில் எந்தவொரு சிவிலியனும் கடற் படையால் பாதிக்கப்பட வில்லையென்றும் கமாண்டர் மகேஷ் கருணாரட்ன தெரிவித்தார். கடற்படையினர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவிலியன்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு
Next post வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு