ஒருவாரகாலத்தின் பின் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின..

Read Time:2 Minute, 5 Second

மட்டக்களப்பு நகரப் பிரதேச பாடசாலைகளில் கடந்த ஒருவாரகாலமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பின கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா வயது 08 பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்;ந்து ஏற்பட்ட பதற்றநிலை பெற்றோர் மற்றம் மாணவர்களுடையே நிலவிய அச்சநிலை காரணமாகவும் மாணவியின் படுகொலையைக் கண்டித்து அனுஷ்டிக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பு காரணமாகவும் நகர பிரதேச பாடசாலைகளில் கடந்த 30ம்திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன ஒருவாரக் காலத்தின் பின் பாடசாலைகளில் வழமைப்போல் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் ஏற்பட்டாலும் மாணவர் வரவு குறிப்பாக ஆரம்ப பிரிவுகளில் வழமை நாட்களை விட சற்றுகுறைவாகவே காணப்பட்டது சமூகமளித்திருந்த ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வருவதிலும் பாடசாலை முடிய வீட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் பெற்றோரே ஈடுபட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது இதற்கிடையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பாடசாலை முடிந்தபின்பு நடைபெற்று வந்த 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விஷேட வகுப்பு உட்பட அனைத்து மேலதிக வகுப்புகளையும் பாடசாலை நிர்வாகங்கள் ரத்து செய்துள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டேவிட் மிலிபாண்ட் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் -இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு
Next post யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்