இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பசில்ராஜபக்ஷ இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் -புருஸ்பெய்ன் தெரிவிப்பு

Read Time:2 Minute, 21 Second

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பஷில் ராஜபக்ஷ, மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர்குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புரூஸ் பெய்ன் கோரியுள்ளார். அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச போர் குற்றச்சாட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளது இதுதொடர்பில் அமைப்பின் ஆலோசகர் புரூஸ்பெய்ன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட சட்டவியலாளர் லூயிஸ் மொனேரோ ஓகாம்போவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பிவைத்துள்ளார். இலங்கையில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட தமிழர்கள் படையினரால் கொலை செய்யப்படுகிறார்கள் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரின் சகோதரர்களான கோத்தபாயராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என புரூஸ் பெய்ன் கோரியுள்ளார். இந்தநிலையில் ரோம் உடன்படிக்கையின் 5-8 வரையிலான பந்திகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பெய்ன் கோரியுள்ளார் ஏற்கனவே பெய்ன் இதுதொடர்பில் முழுமை ஆவணங்களை தயாரித்து அமெரிக்க நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் செல்லத் தடை
Next post ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்..