இரண்டு பிள்ளைகளை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை

Read Time:2 Minute, 0 Second

இரண்டு குழந்தைகளை தூக்கிலிட்டு கொலை செய்த தந்தையொருவர் தானும் அதேபாணியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிகம ஹேன்வல எனும் இடத்தைச் சேர்ந்த என்.எச்.இந்திக்க என்பவரே (வயது44) தன் பிள்ளைகள் இருவரையும்  கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கூரையில் கயிறு ஒன்றை கட்டியே இக்கொலையையும் தற்கொலையையும் செய்துள்ளார் என வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். கோலை செய்யப்பட்ட குழந்தை 10வயதான கவிந்தி சுதரிகா மற்றும் 5வயதான பஸின் மிச்சராஎன்பரேயாவார்.  வெலிகம பொலிஸார் இந்த மரணங்கள்பற்றி கூறுகையில் காலையில் அந்த வீட்டில் மின்விளக்குகள் எரிந்துக் கொண்டிருப்பதை அயல்வீட்டு மக்கள் அவதானித்துள்ளனர். காரணம் புரியாத நிலையில் அவர்கள் வீட்டருகில் சென்று எட்டிப்பார்த்த போது மூன்று சடலங்களும் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். மேசன் தொழி;ல் புரியும் என்.எச்.இந்திக்கவின் மனைவி கடந்த 11மாதங்களுக்கு முன் அவரை விட்டு சென்றபின் குழந்தைகளை தாய் இல்லாமல் வளர்ப்பது கடினமாகி விட்டதால் மனவேதனையில் குழம்பிப்போய் பேதலித்த நிலையில் காணப்பட்ட அவர் இறுதியில் இந்த முடிவுக்கு வந்ததாகவும் விசாரணையின் போது ஊர்மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள்12வயது சிறுவர்களை படையில் இணைத்து வருகின்றனர் -கார்டியன் பத்திரிகை
Next post புளொட் அமைப்பினர் சுவிஸ் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து மேதின ஊர்வலத்தில்.. (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது)