இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் யூ.என்.எச்.ஆர்.சி அனுப்பி வைப்பு

Read Time:1 Minute, 28 Second

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான  அவசர மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மேலதிகமாக 2மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அங்கீகரித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர்ஸ்தானிகர் அன்டோனியோ குட்டாரிஸ் தெரிவித்தார். அரசாங்கத்தின் தகவலின்படி இடம்பெயர்ந்துள்ள சுமார் 1லட்சத்து 50ஆயிரம் பேர் வவுனியா யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள 38நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் அநேகர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் -தமிழக காங்கிரஸ்
Next post இந்தஆண்டு முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -ஊடக அமைச்சர்