பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?

Read Time:3 Minute, 43 Second

cartoonvaiko-001விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நீர் மூழ்கி கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளைய பகுதியின் மிக குறுகிய இடத்திற்குள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், அந்த இயக்கத்தின் முக்கியமான மற்றும் மூத்த தலைவர்களும் பொதுமக்கள் மத்தியில் மறைந்து வாழ்ந்து வருவதாக இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவினர் அவர் மறைந்து இருப்பதாக கருதப்படும் இடத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும், எனவே பிரபாகரன் நிலத்தின் வழியாக தப்பிக்கவே முடியாது என்றும், அவர் தப்பிச் செல்வதற்கு உள்ள ஒரே வழி கடல் மார்க்கம் தான் என்றும் சரத் பொன்சேகா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அவரது கருத்தை உறுதிப்படுத்துவது போல பிரபாகரன் நீர்மூழ்கி கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று ராணுவத்தின் 58-வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி யான பிரிகேடியர் ஷவேந்திரா டிசில்வா கூறியுள்ளார். ‘பாதுகாப்பு வளையப் பகுதியில் தனது மகன் சார்லஸ் அந்தோணியுடன் இருந்து வரும் புலிகள் தலைவர் பிரபாகரன், புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், புலிகளின் கடற்படை பிரிவான கடற்புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் தப்பிச் செல்வதற்காக நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வைத்திருக்கக்கூடும்’ என்று டிசில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் ராணுவத்தில் சரணடைந்த புலிகளின் முன்னாள்  ஊடகப்பிரிவு பொறுப் பாளர் தயா மாஸ்டர் இத்தகவல்களை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவர்களது நிர்வாக தலைநகரமான கிளிநொச்சிக்கு சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று காட்டிய போது டிசில்வா இந்த தகவல்களை கூறினார்.  பிரபாகரனை பொட்டு அம்மான் மற்றும் சூசை உள்ளிட்ட சில புலிகளின் தலைவர்கள் ஆதரித்து வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால்  அவர்களும் பிரபாகரனிடம் இருந்து சென்று விடுவார்கள் என்று தயா மாஸ்டர் கூறியதாகவும் டிசில்வா தெரிவித்தார்.  முல்லைத்தீவின் கடற் பரப்பில் புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்லாதபடி தடுப்பதற்காக இலங்கை ராணுவத்தின் கடற் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    எறும்புகளே
    புத்திமான் பலவான் என்ற அடிப்படை உண்மை கூட புரியாத
    சர்வதேச அரசியலின் நடைமுறைகளைத் தெரியாமல். எட்டாம் வகுப்பே தாண்ட முடியாத பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடித்ததால் வேலுப்பிள்ளை வீட்டாலை கலைத்த ஒருவனை மோட்டுச் சிங்களவனைச் சுத்தி. துரோகிகளுக்கு மண்டையில் போட்டு ஈழத்தை அடிச்சுப் பறிப்பான் என்று எதிர்பார்த்தவர்கள் புக்கா அறிவு சூனியங்கள்
    நண்பர்கள் எவர் என்றில்லாமல் கொலை செய்த ஒருவனை சூரிய தேவன் என்று சாமியறையில் படம் வைத்து நீட்டிய உண்டியலுக்கு எல்லாம் காசு போட்ட நீங்கள் பகுத்தறிவே இல்லாத முழுவிளக்கு எண்ணெய்கள்

  2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    உலகத்தை ஏமாத்தி அரசியல் அடைக்கலம் பெற்றவரே புலத்துத் தமிழர். புலத்துத்தமிழரை ஏமாத்தி தம்மை வளர்த்தவரே புலிகளின் தலைவர்கள். புலிகளின் தலைவர்களை ஏமாற்றி தம்மை வளர்பவ்ர்கள் புலிக்கு வெளி நாட்டில் காசு சேர்ப்பவர்கள் . இந்தக் கொடியவர்களின் வலையில் சிக்கித்தவிப்பவரே மக்கள்

  3. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    பனங்கொட்டை புக்கா விளக்குஎண்ணை பிணக்காட்டு தலைவன் பிரபாகரன் கடத்தின அத்தனை எங்கள் பிள்ளைகளையும் புதை குழிக்குள் அனுப்பி விட்டு புலன் பெயர்ந்தவர்களின் பிழைப்பில் வாங்கிய சாம்செவனை எல்லாம் மண்ணிற்குள் தாட்டுவிட்டு மதிவதனியையும் மகளையும் பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு முடிந்தால் கிளிநொச்சியை ராணுவம் பிடித்து காட்டட்டும் என்றெல்லாம் பீலா பிலிம் காட்டிவிட்டு இந்த அரசியல் ராணுவ சூனியம் கையில் வைத்திருக்கின்ற ஒரே திட்டம் கடைசியாக கையை விரித்து யுத்த நிறுத்தம் அறிவித்து தன் உயிரை காப்பாத்த சரண் அடைவதே.

Leave a Reply

Previous post இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே
Next post புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை