புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் -ஐ.நா.பாதுகாப்பு சபை தலைவர் தெரிவிப்பு

Read Time:5 Minute, 9 Second

‘எல். ரீ. ரீ. ஈ. ஒரு பயங்கரவாத இயக்கம். அப்பாவி சிவிலியன்களை இவர்கள் மனிதக் கேடயங்களாக உபயோகிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தமது பயங்கரவாத செயற்பாடுகளை கைவிட வேண்டும்’ என ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தலைவர் கிளவுட் ஹெலர் அறிவித்துள்ளார். ஐ. நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுடனான உத்தியோகப் பற்றற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியான விஜே நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற உத்தியோகப் பற்றற்ற கூட்டம் இதுவாகும். புலிகள் சிவிலியன்களை கேடயங்களாக பயன்படுத்துவதை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொள்ளாத அதேசமயம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து பெரும் எண்ணிக்கையான சிவிலியன்கள் தப்பி வந்ததை வரவேற்பதனையும் இது எடுத்துக் காட்டுகிறது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் சிவிலியன்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு சகல உதவிகளையும் வழங்குமாறு இவர்கள் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, ஐ. நா. பாதுகாப்புச் சபை யுத்த நிறுத்தத்திற்கோ மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரியோ அழைப்பு விடுக்கவில்லையென்பது தெட்டத் தெளிவாகும். யுத்த நிறுத்தத்திற்கோ மனிதாபிமான நடவடிக்கை நிறுத்தத்திற்கோ ஐ.நா. கோராததுக்கு ஒரு முக்கிய விடயமாகும். அவ்வாறு கோருவது புலிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
நடைபெற்றுவரும் மோதலுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமாயின் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டியதே ஒரேவழி. அப்போதுதான் இராணுவ ரீதியான தீர்வுக்கு பதிலாக அரசியல் ரீதியான தீர்வினைக் காணமுடியும்.

ஐ. நா. கட்டடத்தில் நடத்தப்பட்ட இந்த உத்தியோகப் பற்றற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் உறுப்பினர்கள், தப்பி வரும் சிவிலியன்களுக்கு பாதுகாப்பான வழியைப் பெற்றுத்தருவதற்காக மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டே மேற்கொள்ள வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களுக்காக மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வரும் ஐ. நா. பிரதிநிதிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சிவிலியன்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எந்தவொரு இறுதித் தாக்குதலையும் மேற்கொள்ள திட்டமிட வில்லையென ஐ. நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பலிஹக்கார பாதுகாப்புச் சபையின் பிரதிநிதிகளுக்கு உத்தரவாதமளித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் எந்தவொரு கனரக ஆயுதமும் பயன்படுத்துவதில்லையென அரசாங்கம் உத்தரவாத மளித்திருப்பதனையும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாயின் அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கோரி இவ்வளவு பெரிய தொகை சிவிலியன்கள் வந்திருக்க மாட்டார்களெனவும் பலிஹக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் ஐ. நா. பிரதிநிதிகளுடன் இணைந்து இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களுக்காக முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேனைக்குடியிருப்புப் கிராமத்தில் அமைந்துள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் காரியாலயம்மீது தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
Next post இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ உடனடி நிதியுதவி தேவை: ஐ.நா.