பாதுகாப்பு வலயத்தில் 1/3 பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டில்..
பாதுகாப்பு வலயத்தின் வடபகுதி முழுவதையும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் நேற்றுக்காலை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதற்கமைய, பாதுகாப்பு வலயத்தின் மூன்றில் ஒரு பங்கை படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புப் படை யினர் கனரக ஆயுதங்களையோ, மோட்டார் மற்றும் பீரங்கிகளையோ பாவிக்கவில்லை என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பாதுகாப்புப் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பாவித்த போதிலும் புலிகள் கனரக ஆயுதங்களை பலவற்றை பாவித்ததாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இராவணுப் பேச்சாளர் இங்கு மேலும் தகவல் தருகையில், பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்கள் திரட்டிய பாதுகாப்புப் படையினர் மிகவும் இரகசியமானதும், சூட்சுமமானதுமான திட்டங்களைத் தீட்டினர்.
இதற்கடைய கடந்த 20ம் திகதி அதிகாலை மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு படையினர் சிறிய ரக ஆயுதங்களை பாவித்து முன்னேறிச் சென்றதால் புலிகளின் கனரக ஆயுதங்களின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணியை முன்னெடுக்கும் அதேசமயம் பாதுகாப்பு வலயத்தில் புலிகளிடம் எஞ்சியுள்ள 8 கிலோமீற்றர் மிகவும் ஒடுக்கமான பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என்றார். இராணுவத்தின் கொமான்டோ படைப்பிரிவினர் பாதுகாப்பு வலயத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த புலிகளின் கெப்-ரக வாகனம் ஒன்றை இலக்குவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் அந்த வாகனத்திலிருந்த நான்கு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கலந்தன், விஜயன் எனப்படும் முக்கிய புலிகளின் முக்கிய தலைவர்களும் அடங்குவதாகவும், இவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மைக்ரோ ரக ஆயுதங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றார்.
அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு வலயத்தின் தென் பகுதியை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
One thought on “பாதுகாப்பு வலயத்தில் 1/3 பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டில்..”
Leave a Reply
You must be logged in to post a comment.
தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் தன் உயிரைப் பாதுகாக்க மக்களைப் பலி கொடுப்பவன் மக்களின் தலைவனாம், உயிர் காத்துக் கொள்ள வெளியேறும் மக்களை சுட்டுத் தள்ளும் புலிகள் விடுதலைப் போராளிகளாம்,