பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது

Read Time:2 Minute, 33 Second

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸார் முற்பட்டதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அங்கு முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்தே பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். “பிரான்ஸ் மக்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்துங்கள்’ ‘சார்கோஷி எங்களுக்கு உதவுங்கள்’ என்ற கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்திய பாரிஸில் புகையிரத நிலையம் முன்னால் இந்த எதிர்ப்பார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பைத்தொட்டிகளை கவிழ்த்தும் பொலிஸார் மீது போத்தல்களை வீசியும் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் இதில் பொலிஸார் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்றின் ஊடகவியலாளர், இச்சம்பவத்தில் மூன்று பஸ்களின் கண்ணாடிகள், இரு கார்கள், ஒரு லொறி என்பன சேதமடைந்துள்ளதுடன் ஒரு ஸ்கூட்டர் எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையிலேயே அங்கு வந்த கலகமடக்கும் பொலிஸார் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    வன்னிப்புலி எஜமானர்களும் அவர்களின் புலன் பெயர்ந்த ஏவல்நாய்களும் சேர்ந்து மக்களை ஒன்று திரட்டி இன்று உலகெங்கும் நடத்தும் போராட்டம் ஒரு கேலிக்கூத்தாகி விட்டது,

Leave a Reply

Previous post கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..
Next post புலிகளின் தயாமாஸ்டர் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இராணுவத்திடம் சரண்.. -இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு