கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..

Read Time:1 Minute, 18 Second

வீட்டில் நுழைந்து கொள்ளையிடும் நோக்கில் பலவந்தமாக உட்பிரவேசித்த கொள்ளையர் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொள்ளையர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் வீட்டு உரிமையாளர் அந்தப்பகுதியில் முன்னணியிலுள்ள ஒரு வர்த்தகர் என்று கூறப்படுகிறது கொள்ளையர்கள் இருவரும் அப்பிரதேசத்தில் பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் வைத்தியசாலையில் இருந்து வெளியேற அனுமதி கிடைத்தவுடன் இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப் படவுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் வான் மோதி அறுவர் காயம்
Next post பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது