தேர்தல் வன்முறைகள் அதிகரித்தால் இராணுவம் அழைக்கப்படும் -தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

Read Time:3 Minute, 6 Second

மேல்மாகாண சபைப் பிரச்சார நடவடிக்கைகளின் போது அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறையினரால் முடியாது போய்விட்டால் இந்தப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் எதிர்கட்சி உறுப்பினர்களின் குழு ஒன்று தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்து பேசிய போதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சி மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சிறீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று தேர்தல் ஆணையாளரை சந்தித்து தேர்தல் வன்முறைச ;சம்பவங்கள் தொடர்பாகவும் தமது வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடப்படுவது தொடர்பாகவும் பேச்சுக்களை நடத்தினர். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக தமது கட்சியை சேர்;தவர்கள் சுதந்திரமான முறையில் பிரச்சார நடவடிக்கைகளைமேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் வெளியே சுதந்திரமாக செய்ய முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்க கட்சியை சேர்ந்தவர்கள் சட்டங்களை அப்பட்டமாகவே மீறும் வகையில் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான காவல்படையாக மட்டுமே செயற்பட்டுவரும் நிலைதான் தற்போது காணப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை தெளிவாக கேட்டதுடன் இந்த விடயங்களையிட்டு காவல்துறை மா அதிபருடைய கவனத்திற்கு தான் கொண்டு வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையாளர் காவல்துறையினரால் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் இராணுவத்தை பாதுகாப்பு கடமைக்காக அழைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பானது பரவிக் காணப்படுகிறது..; தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகளை கிழித்தெறிந்தவர் பிரபாகரனே! -அமைச்சர் கருணா அம்மான் குற்றச்சாட்டு
Next post புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான், சூசை, ரமேஷ், ஜெயம், ரத்தின் மாஸ்டர் போன்ற எஞ்சியிருக்கும் தலைவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி மார்க்கமாகவே தப்பியோடும் தமிழ் மக்களை சுட்டுக் கொல்லுமாறு பொட்டுஅம்மான் பகிரங்க உத்தரவு!