சாறுகளும் பயன்களும்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 15 Second

* நரம்புத்தளர்ச்சியுள்ளவர்கள் கேரட் அல்லது நெல்லிக்காய் சாறு சாப்பிடுவது நல்லது.

* தக்காளி, வெள்ளரி, பாகற்காய், எலுமிச்சை, கேரட், பசலைக் கீரை, முட்டைக்கோஸ் இதில் எந்தச் சாற்றை சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது.

* களைப்பை உணர்பவர்கள் வென்னீரில் தேனை ஊற்றிச் சாப்பிட்டால் புதுத் தெம்பு பிறக்கும்.

* சிறுநீரகக் கல் தொந்தரவு உள்ளவர்கள், கேரட் சாறுடன் முள்ளங்கிச் சாறு கலந்து குடித்தால் நல்ல குணம் தெரியும்.

* ஆஸ்துமா தொல்லையுள்ளவர்கள் துளசி மற்றும் இஞ்சிச்சாற்றினை கலந்து தேனுடன் சாப்பிட்டால் இதமாக இருக்கும்.

* உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் தினமும் வெள்ளரிச்சாறு அருந்த வேண்டும்.

* பீட்ரூட் சாறு ரத்த விருத்திக்கு நல்லது.

வெங்காயத்தின் பயன்கள்

* வதக்கிய வெங்காயத்தைவிட பச்சை வெங்காயத்திற்கு மருத்துவ சக்தி அதிகம்.

* வெங்காயம் ஒரு கிருமி நாசினியாகும்.

* தினந்தோறும் தோலுரித்த வெங்காயத்தை சாப்பிட்டால் காசநோய் அகலும்.

* பச்சை வெங்காயத்துடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும். மேலும் இதனுடன் மோர் குடித்து வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

* தோலுரித்த வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து உண்ண பித்தம் போகும்.

* முகப்பரு நீங்குவதற்கு பரு உள்ள இடத்தில் வெங்காய சாறு தடவலாம்.

* வெங்காயத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதப்பிணி அகலும்.

* நெருப்பணலில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு முதலியன நீங்கும்.

* உணவில் அதிக அளவு வெங்காயம் சேர்த்துக்கொள்ள சரும நோய்கள் வராது.

* தினமும் பச்சை வெங்காயத்தை உண்டுவந்தால் வாய், தொண்டை முதலியவற்றில் காணப்படும் கிருமிகளின் தொல்லைகள் நீங்கும்.

* கொப்புளம், காயம் முதலியவற்றிற்கு வதக்கிய வெங்காயத்தை அரைத்துப் பூச வேண்டும்.

* வதக்கிய வெங்காயத்துடன் சீரகம், பசுவின் நெய், கற்கண்டு கலந்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

* வெங்காயச்சாற்றுடன் கடுகு எண்ணெயை கலந்து பயன்படுத்தினால் மூட்டுவலி நீங்கும்.

குங்குமப்பூவே…

* குங்குமப்பூவிற்கு ஞாழல் பூ, கேசரி, கும்கும் என்ற பிற பெயர்களும் உண்டு.

* ஜுரம், ஈரல் பெருக்கம், மனக்கவலை, இழுப்பு ஆகியவைகளை நீக்கக்கூடியது.

* நாவறட்சி, மேகநீர், மண்டை வலி, கண் நோய், வாந்தி முதலிய நோய்களால் ஏற்படும் துன்பங்களை தீர்க்கவல்ல அருமருந்து.

* கர்ப்பமடைந்த பெண்கள் தாம்பூலத்துடன் சிறிது குங்குமப்பூவையும் சேர்த்து பயன்படுத்துவதால் பிரசவ காலத் தொல்லைகள் குறைந்து பிரச்னையின்றி சுகப்பிரசவம் உண்டாகும்.

* நடுவயதில் மாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் தலைவலியை குறைக்கும்.

* வெளி உபயோகப் பூச்சாக குங்குமப்பூவைப் பயன்படுத்தினால் ஆரோக்கிய குறைவினால் தோலின் நிறம் மங்கிப் போவதைத் தடுக்கும் ஆற்றல்மிக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் குழந்தைகள்தான் என்னை வாழவைத்தார்கள்!! (மகளிர் பக்கம்)
Next post நோய்களை விரட்டும் வண்ணங்கள்!! (மருத்துவம்)