கீரையும் மருத்துவ குணமும்!! (மருத்துவம்)
கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் சுமார் 20 வகை கீரைகளை அறிந்திருப்போம். அப்படி நமக்கு பரிச்சயமான கீரைகளில் ஏதேனும் ஒன்றை நாம் தினமும் உணவில் ேசர்த்துக் ெகாள்வது அவசியம். மேலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அகத்திக் கீரை: உடல் சூட்டைத் தணிக்கும். ரத்த அழுத்தம், பித்தத்தை நீக்கும். மூளைக்கோளாறு, கண் கோளாறு களுக்கு நல்ல நிவாரணம் தரும்.
அரைக்கீரை: உடலை வனப்பாக்கும் சக்தி கொண்டது. வாயுக் கோளாறு, வாத சம்பந்தப்பட்ட நரம்பு வலிகளை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றைச் சுத்தப்படுத்தும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், அதிக ரத்தப் போக்கு இவற்றிற்கு அரைக்கீரை நல்ல பலன்தரும்.
ஆவாரைக்கீரை: ஆவாரம்பூ கீரையினை சுத்தம் செய்து பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல், பெண்களைப் பொறுத்த வரையில் பெரும்பாடு போன்றவை குணமாகும்.
இலட்சக் கீரை: ஜலதோஷம், இருமல், சளி இவற்றால் அவதிக்குள்ளாகுபவர்கள் இக்கீரையை உண்டால் பலனை அடையலாம். உடல் பலவீனம் மற்றும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ரத்த சோகை, நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரை: மஞ்சள் காமாலை, பித்தக்கோளாறு, உடற்சூடு, ரத்த சோகை, கல்லீரல் கோளாறுகள், மாலைக் கண், மலச்சிக்கல் போன்ற
நோய்கள் நீங்கும்.
சக்கரவர்த்திக் கீரை: ரத்தத்தை விருத்தி செய்யும். குழந்தைகள் நல்ல வலிமையுடன் திகழ சக்கரவர்த்திக் கீரையை கொடுத்து வரலாம்.
சிறுகீரை: உடலுக்கு வலிமையும், ஞாபக சக்தியைத் தருகிறது. தோல் நோய்களை குணப்படுத்தும். கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக விளங்கும்.
திருநீற்றுப்பச்சிலை கீரை: மார்பில் உரையும் சளியை கரைக்கும். காசநோய் மற்றும் ஆஸ்துமாவைக் குணப்படுத்தும். அடிக்கடி வரும் இருமல், சைனஸ்
தொல்லையை நீக்கும்.
பசலைக் கீரை: மலச்சிக்கலை போக்கும். நீர்க்கடுப்பை நீக்கும்.
புதினாக்கீரை: அன்றாடம் பயன்படுத்தினால், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லைகள், பசியின்மை, மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், சிறுநீரகத்தில் கல், நுரையீரல் கோளாறுகள் போன்றவை குணமடையும். புதினாச் சாறு அஜீரணத்திற்கு சிறந்தது.
மணத்தக்காளி கீரை: கல்லீரல் கோளாறுக்கு இந்த இலையின் சாறு 8 அவுன்ஸ் வீதம் சாப்பிடலாம். பசியில்லாமையைப் போக்கும். சருமத்தில் தேமல் இருந்தால், கீரையை கசக்கித் தேய்த்தால்
குணமாகும்.
முருங்கைக் கீரை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமை தரும். ரத்தம் விருத்தி ஏற்படும்.
வல்லாரைக் கீரை: ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
வெந்தயக்கீரை: அஜீரண பிரச்னையை தீர்க்கும். காசநோய் பாதிப்பு இருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக விலகச் செய்யும். வாதநோய், பித்தம் சம்பந்தப்பட்ட பிணிகள், குடல்புண்கள், வயிற்று வலி போன்றவைக்கு சிறந்த நிவாரணம்.