ஜவ்வரிசியின் நன்மைகள்!! (மருத்துவம்)
மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. இதனை சாகோ, சகுடானா, சபுதானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர்.ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கும். மேலும் உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். பல இந்தியர்கள் பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் வகை உணவாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.ஜவ்வரிசியில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் . இது ரத்த நாளங்கள் வழியாக ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்குகிறது. இதையொட்டி, ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது மற்றும் இதயத்தில் உள்ள சிரமத்தை குறைக்கிறது.
ஜவ்வரிசி தசை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லாது உடல் வலிமை பெறவும் உதவுகிறது.செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஜவ்வரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.
ஜவ்வரிசியில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது.ஜவ்வரிசியில் மாவுச்சத்து மற்றும் எளிய சர்க்கரை நிறைந்துள்ளது. அவை உடலில் எளிதில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிகளவு குளுக்கோஸை உருவாக்குகிறது. விரதத்திற்கு பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடலை அதிக ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது மற்றும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவற்றைத் தடுக்கிறது.
ஒரு கப் ஜவ்வரிசியில் 544 கலோரிகள், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 1.37 கிராம் நார்ச்சத்து, 152 மி.கி. மேக்னீசியம், 16.7 மி.கி. பொட்டாசியம், 30.4 மி.கி. கால்சியம் ஆகியவை நிரம்பியுள்ளன. இது தவிர சிறிதளவு புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து போன்றவையும் உள்ளன.
கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும். இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலைப் பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.