செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 48 Second

வயிற்று எரிச்சல், புளி ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்றுவலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இப்போது சர்வசாதாரணமாக ஏற்படுகிறது. இவற்றைப் போக்க இயற்கை உணவு எடுத்துக் கொண்டாலே அதன் பலன்களை அடையலாம்.இஞ்சி: செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் செரிமான அமிலம் கல்லீரலில் சுரக்கும். இது வயிற்றில் செரிமான அமிலமாக உணவை கரைக்கும் போது உணவுக் குழாயில் ஏற்படும் வாயு, வயிறு, குடல், உணவுகள் குழாயில் தேங்க விடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றும். இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இரு வேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் ஏற்படும்.

புதினா: செரிமான கோளாறுகளை சரி செய்யும் புதினாவை அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க அதிகமாக பயன்படுத்துகிறார்கள். வயிற்றுக்கும் உணவுக் குழாவுக்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை ரிலாக்ஸ் செய்து சாப்பிட்டவுடன் மலம் கழிக்க தூண்டும். மலக்குடலில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை போக்க உதவும். இது வாயு பிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் உணவு எளிதில் செரிமானமாகும்.

லவங்கம்: இதை சமையலில் சுவை, வாசனைக்காக மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்து இருப்பதால், பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிெடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகிறது. வாயுவின் அளவை மட்டுப்படுத்தும். வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு நீங்கும்.ஓமம்: இது அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றை போக்கும். ஓமம் செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. தினமும் அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அரைடம்ளர் ஆகும் வரை சூடாக்கி தினமும் காலை, மாலை இரு வேளை பருகி வந்தால் வயிறு மந்தம் சரியாகும்.

சீரகம்: இரும்பு, கால்சியம், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. பிரியாணி போன்ற ரெசிபிகளில் இதை சேர்ப்பதால் சுவை, மணம், செரிமானம் எளிதாக்கும். இரப்பை அலர்ஜியை சரிசெய்யும். மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைப் போக்கும்.

வெந்தயம்: இதில் வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் உள்ளது. கெட்ட கொலாஸ்ட்ராலை குறைக்கும். ஆன்டி ஆக்ஸிடன்களும், நார் சத்தும் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)
Next post ரீ யூசபிள் நாப்கின் தயாரிப்பில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை!! (மகளிர் பக்கம்)