வெயிலோடு விளையாடு!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 13 Second

வெயில் என்பது சருமத்திற்கு எதிரி. அதிலும் பிற்பகல் வெயில் மேனியை கருக்கச் செய்து, பல தோல் உபாதைகளை தந்து விடுகிறது. இதை எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே குணமாக்கலாம்.

*கெட்டியான மோரில் பஞ்சை நனைத்து வெயிலால் கருத்த மேனியில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவிவர சருமம் பழைய நிறத்திற்கு வந்து விடும்.

*ஒரு டேபிள்ஸ்பூன் பன்னீருடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து தடவ கருமை மாறும்.

*தக்காளி விழுதும், மோரும் கலந்து அந்தக் கலவையை குளிக்கும் முன் பூசி, சற்று ஊறியதும், கழுவிவர கருமை மறைய ஆரம்பிக்கும்.

*உருளைக்கிழங்கை சாறெடுத்து அதை கருமை படர்ந்த இடத்தில் தடவி கழுவி வர, சருமம் பளிச்சிடும்.

*வெள்ளரிக்காயை தயிருடன் அரைத்து அதை பூசலாம்.

*எலுமிச்சைசாறு, சர்க்கரை, கிளிசரின் இவற்றை தலா 1 டீஸ்பூன் எடுத்து கலந்து அதை தடவி கழுவிட வெயிலின் கருப்பு மறையும். தோலும் மென்மையாகும்.

*கேரட் சாறுடன் தேன் கலந்து தடவினால், சரும நிறம் மேம்படும்.

*ரோஜா இதழ்களை அரைத்துக் கொண்டு அதனுடன் கடலைமாவு, சிறிது பன்னீர் கலந்து தடவிவர முகம், கழுத்து, கை என மேனி கருப்பு மாறி பளபளப்பை கொடுக்கும்.

*பப்பாளி விழுதை கருமை படர்ந்த இடங்களில் தடவலாம்.

*நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குங்குமாதித் தைலம் வாங்கி சில துளிகள் எடுத்து தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

*குளியலுக்கு நலுங்குமாவு பயன்படுத்த தோல் மிருதுவாகவும், கருமை நீங்கி சுத்தமாகவும் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குறை சொன்னால் குஷி இருக்காது!!!(அவ்வப்போது கிளாமர்)
Next post டிரெண்டாக மாறிவரும் கைத்தறி உடைகள்!! (மகளிர் பக்கம்)