உலகின் உயிர்ப்பால்!! (மருத்துவம்)
ஒவ்வொரு குழந்தையும் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும்போது தாயின் ரத்தத்தின் வாயிலாகவே தனது உணவைப் பெற்று வளர்ச்சி அடைகின்றது. பிறந்த ஒரு குழந்தைக்கு உணவுத்தேவை. அதன் உடலுக்கு ஏற்ற உணவாக கொடுக்கப்படல் நலம். அவ்வுணவு சுகாதாரமானதாகவும் எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும், தேவையான ஊட்டச்சத்துக்கள் அளிப்பதாகவும் இருந்திடல் வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ள ஓர் உணவுதான் தாய்ப்பால்.
*பிறந்த குழந்தைக்கு மூன்று முதல் ஆறு மணிக்குள்ளாக பசி எடுக்கும். அச்சமயம் அந்த குழந்தைக்கு வெதுவெதுப்பான சுத்தமான தண்ணீர்தான். பின் பத்து மணி நேரம் சென்றபின் தாய்ப்பால் கொடுக்கலாம். இத்தாய்ப்பாலை அருந்தும் குழந்தைக்கு அஜீரணம், வாந்தி, பேதி எதுவும் வருவதில்லை. மனோரீதியாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தன் தாயிடம் அன்பு கொண்டவையாகவே இருக்கும்.
*குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களின் உணவுப்பழக்கத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். பால் கொடுக்க ஆரம்பித்த இரண்டு நாட்களில் தாய்ப்பால் மஞ்சள் நிறமாய் இருக்கும். இதை ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இப்பாலில் நோய் எதிர்ப்புசக்தி உண்டு. பால் கொடுக்கும் தாய்மார்கள் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பது முக்கியமானதாகும்.
*வலப்பக்கமாகவோ (அ) இடப்பக்கமாகவோ குழந்தையை அணைத்தபடி உட்கார்ந்து குழந்தையின் மூக்கு, மார்பின் மீது அழுந்தாமல் பால் தரவேண்டும். படுக்கையில் படுத்தபடி பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
*குழந்தைக்கு ஐந்து நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை பால் கொடுத்துப் பழக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பால் தர வேண்டும்.
*தாய் நோயுற்று இருக்கும்போது குழந்தைக்கு பால் தரக்கூடாது.
*தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டுக்காய்ச்சி குடித்தால் தாய்க்கு பால் சுரப்பு பெருகும். ஒரு வருடம் ஆன பிறகு பாலை நிறுத்திடலாம்.
– கஸ்தூரி லோகநாதன், சென்னை.
குழந்தைகளை இப்படியும் சாப்பிட வைக்கலாம்!
*குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கை கழுவச் சொல்ல வேண்டும். சாப்பிட்டபின் வாய் கொப்புளிக்க பழக்கப்படுத்த வேண்டும்.
*குழந்தைகள் உட்கார ஆரம்பிக்கும்போதே எல்லோருடனும் சேர்ந்து தட்டில் சாப்பிடச் சொன்னால் எல்லா வகை உணவையும் சாப்பிட கற்றுக்கொள்ளும்.
*டி.வி., செல்போன் பார்த்துக்கொண்டோ, வெளியில் அழைத்துச் சென்றோ சோறு ஊட்ட வேண்டாம்.
*நொறுக்குத்தீனியைத் தர துவங்கும்போது பழங்கள், பச்சைக்காய்கறிகளை ஸ்நாக்ஸ் ஆக அறிமுகப்படுத்தலாம்.
*மாற்றத்தை குழந்தைகளும் விரும்புவர். அதனால் விதவிதமாக சமைத்துக் கொடுப்பது அவசியம்.
*சீக்கிரம் சாப்பிடு என்று அவசரப்படுத்தாமல் மெதுவாக மென்று சாப்பிடச் சொல்ல வேண்டும்.
*காலை டிபன், மதியம், இரவு உணவுகளை சரியான நேரத்திற்கு கொடுத்து பழக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த நேரத்தில் தானாகவே பசியெடுக்கும்.
*எல்லாவற்றுக்கும் மேலாக அன்பாக கொடுத்தால்தான் ஆசையாக சாப்பிடுவார்கள். பொறுமையோடு கொடுத்து, அவர்களின் போக்குக்கே சென்று, வழிக்கு கொண்டு வந்தால் குழந்தைகள் எந்த உணவையும் விரும்பி சாப்பிடுவார்கள்.