சோர்வைப் போக்கும் சோம்பு!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 30 Second

செரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும், செரிமான சக்தி அதிகமாவதுடன் வாய் துர்நாற்றமும் நீங்கும்.நாள்தோறும் காலையில் அரை தேக்கரண்டி, சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும். நச்சுக்கள் யாவும் நீங்கி, கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு சீராகும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மை சோம்புக்கு உண்டு. நாள்தோறும் சிறிதளவு சோம்பை சாப்பிட்டு வந்தாலே போதும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளை சோம்பு நிவர்த்தி செய்கிறது. சோம்பை இலேசாக வறுத்துப்பொடி செய்து வேளை ஒன்றுக்கு 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிணிகள் நீங்கிவிடும்.

இரவில் உறக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் சோம்புத் தண்ணீரைத் தினமும் குடித்து வந்தால், இரவில் நன்றாகத் தூக்கம் வரும். மேலும், மூளை சுறுசுறுப்பாகவும். புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சோம்பை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும். உடல் சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தருகிறது சோம்பு.

சோம்புக் கீரையில், விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது சோம்புக்கீரை உணவில் சேர்ப்பது நல்லது.

நூறு கிராம் ஃப்ரஷ் கீரையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. அதனால், தினந்தோறும் ஏழுகிராம் இலைகள் வரை ஒருவர் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக அமெரிக்கன் வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு களைய!! (மருத்துவம்)
Next post தலைச்சுற்றல் தீர்வு என்ன ? (மருத்துவம்)