பெண்களே…! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..? (அவ்வப்போது கிளாமர்)
உடலுறவு என்பது ஆணும் – பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்பதே நிதர்சனம். ஆணும் பெண்ணும் மட்டும் ஒன்று சேருவது உடலுறவு கிடையாது. ஒரு ஆணும் – ஆணும் அல்லது ஒரு பெண்ணும் – பெண்ணும் ஒன்று சேருவதுகூட உடலுறவு கொள்வதுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். “காதல்” மிக உன்னதமான ஒன்று. நமக்கு யார்மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறோமோ அவர்களிடமே உடலுறவு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
இதில் எந்த பாலின வேறுபாடும் இல்லை என்பதே உண்மை. இதில் ஒரு புதிய வகை உள்ளது. நம் மீதே நாம் உடலுறவு வைப்பது. இதனை சரியாக சொல்ல வேண்டுமென்றால் “சுய இன்பம்” என்று கூறலாம். ஆண் – பெண் என இருவரும் சுய இன்பம் பெறுவது இயல்பான ஒன்றே. ஆனால் அடிக்கடி சுய இன்பம் கொள்வதால் பல தீமைகள் இதில் ஏற்படுகிறது என்றே ஆராய்ச்சிகள் சொல்கிறது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லப்போனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பக்க விளைவுகள் வரக்கூடும். இதனை பற்றி இனி அறிந்து கொள்வோம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#புள்ளி விவரம்
சுய இன்பத்தை பற்றி புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒரு அதிர்ச்சிகரமான விடையே கிடைத்துள்ளது. வாழ்நாளில் 95% ஆண்களும், 92% பெண்களும் சுய இன்பம் கொள்வதாக அந்த புள்ளி விவரம் விவரிக்கிறது. இது சில வகையாக பிரித்தும் சொல்லப்படுகிறது. சிலருக்கு சிறுவயதிலேயே சுய இன்பம் மீது ஈர்ப்பு வந்திருக்கலாம், சிலருக்கு பதின் பருவத்தில் இது வரலாம், அல்லது சிலருக்கு வயோதிக காலத்தில் கூட வரலாம். எப்போதிருந்தாலும் இது சில தீமைகளை கொடுத்துவிட்டுதான் செல்கிறது.
#அடிமை ஆகுதல்
பொதுவாக சுய இன்பம் எப்போதாவது செய்தால், அது உடலுக்கு நன்மை தரும். ஆனால், ஒரு முறை செய்துவிட்டு இதன்மீது மோகம் கொண்டால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். மது பழக்கம், போதை பழக்கம் எப்படியோ அதே போன்றுதான் இந்த சுய இன்பமும். இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகினால் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் மன குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.
#பாலியல் வாழ்க்கை
சுய இன்பம் கொள்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் அதிகம் நாட்டம் கொள்ளமுடியாமல் போய்விடும். இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும். சுய இன்பம் கொள்வதால் ஆர்கசம் விரைவில் அடைந்து தனது துணையுடன் உடலுறவு கொள்ளாமல் போகும் நிலை ஏற்பட கூடும். இது உங்கள் இருவரின் வாழ்க்கையின் இன்பத்தையே கெடுத்துவிடும்.
#அசாதாரண நிலை
சுய இன்பம் கொள்வதால், அதன்மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு உடலில் அசாதாரண சூழல் வரக்கூடும். இது அதிக பசியை தூண்டி கண்ட நேரத்தில் சாப்பிட செய்துவிடும். இதன் விளைவாக உடல் பருமன், இதயம் சார்ந்த நோய்கள், மன அழுத்தம் ஆகியவை வரக்கூடும். மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பாதிப்பை தரும். நாம் தினமும் இதனை தொடர்ந்தால் நம் அன்றாட வாழ்க்கை சீர்கேடடையும்.
#உறுப்புகள் பாதிப்பு
அடிக்கடி பெண்கள் சுய இன்பம் கொள்வதால் அவர்களில் பாலியல் உறுப்புகள் சேதமடைய கூடும். உடலுறவு வைத்து கொள்ள பெரிதும் தடையாக இருக்கும். அத்துடன்
அந்த உறுப்புகள் வலுவிழந்து பாலியல் வாழ்க்கையில் மிக பெரிய விரிவை கொடுக்கும். எனவே சுய இன்பம் அடிக்கடி செய்வதை கட்டாயம் தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்தையம், மன ஆரோக்கியத்தையும், எல்லாவற்றிற்கும் மேல் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
#நோய் தொற்றுகள்
உடலில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டால் அது நோய் தொற்றாக இருக்கலாம். குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த மாதிரி தொற்றுகள் பிறப்புறுப்புகளில் வந்தால் அவ்வளவுதான். இது பல அபாயகரமான பிரச்சினைகளை உருவாக்க வல்லது. சுய இன்பம் அடிக்கடி கொள்வதால் பெண்களின் பிறப்புறுப்புகளில் ஈரப்பதம் இன்றி, வறண்டு போகும். அத்தோடு சேர்த்து நோய் தொற்றுகளும் ஒட்டி கொண்டு சீழ் போன்றவை வரும்.
#உளவியல் தொல்லை
பலருக்கு சுய இன்பம் என்றாலே ஒருவித பயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் தனிமை நேரத்தில் அவர்கள் சுய இன்பம் கொண்டு பிறகு அதனையே நினைத்து வருந்துவார்கள். ஏதோ மிக பெரிய குற்றம் செய்துவிட்டது போல அதையே திரும்ப திரும்ப நினைவூட்டுவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். இது உளவியல் ரீதியாக மிக பெரிய தாக்கத்தை அவர்களுக்குள் வரவழைக்கும்.
#ஆரோக்கியமற்ற வாழ்வு
சுய இன்பத்தால் பல மனம் சார்ந்த பிரச்சினைகள் வருவதால் இது உடல் ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதிக்கும். இதனால் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல், தேவையற்ற மனக்கசப்புகளுடன் வாழ இது வழி வகுக்கும். எனவே “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.