சிறுகதை-விலகிப் போகாதே… நில்! (மகளிர் பக்கம்)
‘எமகாதியா இருப்பா போல… நமக்கு ஒத்துவராது வேற. ஜாதகத்தைக் கொண்டு வாங்க’ என்று தட்டிக் கழித்தாள் முல்லை.
‘‘அம்மா வர்ற இடங்களை எல்லாம் தட்டிக் கழித்தால் எப்படி? இந்த பொண்ணுக்கு என்ன குறை? மூக்கும் முழியும் நல்லாதானே இருக்கு. பார்க்காமலே எமகாத்தி என்று எப்படி சொல்லுறீங்க…” எதிர்த்து கேள்விக் கேட்டான் தங்கராஜ்.
“இம் உம் காக்கா பறக்கும்போதே தெரியும்? அந்த பொண்ணு போட்டோவிலே ஊரை வளைச்சி வலையில போடுற கும்பலாத் தெரியுது. எதுக்கு வீண் பேச்சு
வேண்டாமென்று சொன்னால் விட்டுத் தொலை” என்று விட்டேந்தியாக பதில் தந்தாள்.
“நீ! அவள் கூட வாழப் போறது
இல்லையே. விமலன் அவனுக்கு பிடிச்ச பெண்ணைத் தேர்ந்து எடுக்கட்டுமே…”
இடையில் புகுந்தான் கமல்.நீயும் தான் தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிகிட்டீங்க. தம்படி பைசாவுக்குப் பிரயோஜனம் உண்டா? இல்ல இல்லையா? அதற்கு மேல் பேச்சை வளர்க்க விருப்பமில்லை. சுஜி வேலையில் இருந்து வர்ற நேரம். உண்டுகொழுத்த நண்டு வலையில தங்காது. அம்மாவிடம் தம்பிக்காக பேசப் போயி சுஜி காதுல அம்மாவின் தேவையற்ற பேச்சு காதில் விழுந்தால், நிம்மதியான தாம்பத்தியம் இடையே விரிசல் எதுக்கு? பேசாமல் இருப்பது, நூறு காரியங்கள் சாதிக்க இயலும்.
‘என்னடா கமலா சைலன்ட்டாயிட்டே. உன் பொண்டாட்டி’….‘அம்மா நிறுத்து. அவ வர்ற நேரத்துல தேவையில்லாத வெட்டிப் பேச்சு எதுக்கு?’
முல்லை பொதுவா நல்லவதான். தன் பிள்ளைகள் விமலன், கமலனாதன் மீது கொள்ள பிரியம் வைத்திருந்தாள். கல்யாண புரோக்கர் சுந்தர் கொண்டு வந்த ஜாதகத்தில் சுஜியின் அழகு ரொம்பவும் கமலநாதனுக்கு பிடித்து போச்சு. பெரியவங்க பேச்சில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தது. முல்லை தடை போட்டாள். கமலநாதன் மீறி அதே பெண்ணை முடிக்க சுந்தர் புரோக்கரை நச்சரித்தான். அவரின் துணையோடு சுஜி வேலை செய்யும் ஆபீஸுக்கு சென்று தன்னை மணக்க வேண்டும் என்று கெஞ்சினான். முதலில் மறுத்தவள், பூர்வ ஜென்ம பந்தமோ எதுவோ ஒன்று சுஜி கண்முன் நிழலாடியது.
கமலநாதனை மணக்க ஒப்புக் கொண்டாள். இரு வீட்டிலும் பகை வலுத்தது.கமலநாதன், மணந்தால் சுஜியை மணப்பேன். தடுத்தால் மரணத்தைத் தழுவுவேன் என்று பயமுறுத்தினான்.
இந்த சலசலப்புக்கு பனங்காட்டு நரி மசியாது. வேற இடத்துல ஏற்பாடு பண்ணியாச்சு வர்ற ஆறாம் தேதி கை நனைக்கப் போறோம். பிடிக்காத மருமவள் வந்தா காலமெல்லாம் குத்தம் கண்டுபிடிக்க சொல்லும் மனசு. புரிஞ்சு நடந்துக்கோ என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.
உடனே சுஜிக்கு போன் போட்டான். ‘அறிவு கெட்ட முண்டம். உன் அம்மா கல்யாணத்திற்குப் பொண்ணு பார்த்து தேதி குறிக்கிற அளவுக்கு போயிடுச்சு. இன்னும் என் பொண்ணு பின்னாடி சுத்துற’ என்று கத்தினார். சுஜியின் அப்பா ஜெகன்நாதன்.‘அங்கிள் கொஞ்சம் என்னைப் பேச விடுங்க. எனக்கு கல்யாணம், கர்மாதி எது நடந்தாலும் உங்க பொண்ணால மட்டும் தான் நடக்கும்.’
‘டேய்! வைடா…’ என்று கைப்பேசியை துண்டித்தார்.
கமலநாதன் மண்டையில் ஆயிரம் தேள்கள் கொட்டியது. இரு கைகளாலும் தலையைத் தாங்கிப் பிடித்தான். அப்பா என்னால் முடியவில்லையே. சுஜி…. சுஜி…. சுஜி… என்ற இரண்டெழுத்தை உச்சரித்தான். அலுவலகத்தில் ஆருயிர் நண்பன் கதிர். டேய் கமலநாதா எதற்கு சிரமம் பேசாம அம்மா… முடியாதுடா, சுஜியை தவிர வேறு ஒருத்தியை என் மனசு ஏற்றுக்கொள்ள வில்லையே. அவளும் என்னைத் தவிர வேறு ஒருவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டா.. உறுதியாகக் கூறினான்.கமலநாதன் கைப்பேசி அலறியது. எடுத்தான். புதிய எண்… அடச்சீ… என்று அணைத்தான். மீண்டும் மீண்டும் துடித்தது.‘என்ன யாருன்னு பாருடா’ என்று பிடுங்கி அழுத்தினான். ‘ஹலோ’ கமலநாதனா சுஜி பேசணுமாம்.. சட்டென நண்பனிடம் கொடுத்தான்.
கல்யாணம் கருமாதி எல்லாம் பேசுறீங்க. உங்கள தவிர நானும்… உங்களை இப்பவே பாக்கனும் என்று பேச்சில் பதட்டம் தெரிந்தது.சுஜி… சுஜி… எங்கே வர்றனும் சொல்லு. காந்தி மண்டபம் பின்னாடி என்றாள்.
எப்போ வர்றது சுஜி…
ராத்திரி 1 மணிக்கு… பட்டென துண்டித்தாள். ஸ்பீக்கரில் இருந்ததால் கதிருக்கும் விஷயம் தெரிந்தது.
கமலநாதா! நீ…
ஆமாம் அவளே வர்றா…
இரவு 1 மணிக்கு காந்தி மண்டபத்தில் காத்திருந்தான். சுஜி வரவே இல்லை. பொழுது புலர்ந்ததும் வீடு திரும்பினான்.
வாசலில் தண்ணீர் தெளித்த முல்லை, என்னடா எங்கே போன காரியம் என்று விஷமமாக சிரித்தாள்.
கண்களை இருக்கி கூர்ந்து அம்மாவை பார்த்தான். எல்லாம் உன் வேலையாம்மா…
பின்னே யாரு? அந்த கழுத வீட்டுல தகவல் தந்தது என மிடுக்காக நிமிர்ந்து நின்றாள்.ஓ! இதழ் குவித்தான். பேசாமல் தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தான். யோசித்தான். யோசித்தான்… குறுக்கும் நெருக்குமாய் நடந்தான். ஒரு முடிவுக்கு வந்தான். குளித்து பகட்டான ஆடையை அணிந்தான். கதவு திறந்து வெளியே வந்தான். சென்ட் வாசனை மூக்கை துளைக்க காய் அரிந்து கொண்டு இருந்த முல்லை மகனை நிமிர்ந்து பார்த்தாள். வயிற்றில் மின்மினி பூச்சிகள் பறந்தன.கமலநாதா! டிபன் சாப்பிடுடா… பேச்சுக் கொடுத்தாள்.
அவசர வேலை மீட்டிங் கிளம்பணும்… முல்லை முகத்தை பார்ப்பதை தவிர்த்து கிளம்பினான்.
கதிருக்கு தகவல் சொன்னாள்.மீட்டிங் எதுவுமில்லையே…
உடனே சுஜி வீட்டிற்கு போன் போட்டாள். என்ன திருட்டு கல்யாணமா?
எந்த கோயில்ல… எகத்தாளமாக சுஜி அப்பாவிடம் கேட்டாள்.
அந்த மனுஷன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிச்சான். ஏய்! கிழவி… என்ன திமிரா உன் பணத்திமிரை என்கிட்டே காட்டாதே என்று வாயிக்கு வந்தபடி திட்டினான்.
முல்லையும் விடாமல் எதிர் பதில் தந்தாள்.ஏதோ தப்பு நடக்க போகுது என ஊகித்த சுஜியின் அப்பா தம் மகளை தங்கை வீடான வேலூருக்கு அனுப்பி வைத்தார்.
கண்கொத்தி பாம்பாக கவனித்து கண்காணித்த கமலநாதன் பின் தொடர்ந்து வேலூருக்கு சென்றான்.
சுஜி, சாயிநாதபுரத்தில் இறங்கியதும், செல்போனில் பேசினான். சுஜி இன்னிக்கு கோட்டை கோவிலுக்கு ஆறு மணிக்கு வா. பச்சை ரோஸ்… ஞாபகம், பச்சை ரோஸ்…
அன்று ஆறுமணிக்கு அத்தை மகனுடன் கோவிலுக்கு சென்றாள் (வந்தாள்). எங்கும்… கமலநாதன் தென்படவில்லை.அவள் அருகே ஒரு பெரியவர் பச்சை வேட்டி அணிந்து கழுத்தில் ருத்திராட்சம், கொண்டை புனைந்து கொண்டு, பன்னீர் ரோஜா விற்றுக் கொண்டு இருந்தார். பச்சை ரோஸ்… விலகிப் போகாதே நில்… கமலநாதா என்று கூவினார்.
நாலடி எடுத்து முன்னால் வைத்தவள், பூ வாங்கிட்டு வர்றேன் என்று திரும்பி பெரியவரிடம் வந்தாள்.ரோஜா மாலை கை மாறியது. அதன் உள்ளே இருந்த கடிதமும் கைக்கு கிடைத்தது. காசு கொடுப்பது போல பூமாலையை புரட்டினாள். கடிதத்தில் நீ விலகிப் போகாதே… நில்… கண்ணன் லார்ஜ் ஓட்டல்ல சந்திப்போம்… கமல்.அரக்க பரக்க சுவாமியை வணங்கினாள். மாமா… காபி சாப்பிடலாமா? என்று அழைத்தாள். சரி என்றதும் கண்ணன் ஓட்டலுக்குச் சென்றனர்.
டேபிளில் அமர்ந்து காபி குடித்து திரும்பினர், ‘ஐயய்யோ! பர்ஸ்சை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் மாமா. எடுத்துட்டு வர்றேன்’ என்று திரும்பி ஓட்டலுக்குள் சென்றாள். பர்சை எடுத்தவள்
பாத்ரூமுக்குள் புகுந்தாள்.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. சுஜி திரும்பி வரவே இல்லை. அத்தை மகன் உள்ளே சென்றுத் தேடினான். சுஜி மாயமாய் மறைந்து விட்டாள். என்ன செய்வது புரியாமல் குழப்பம் அடைந்தான். மாமாவிற்கு தகவல் கூறினான். சுஜியின் அப்பா பதறினார். முல்லைக்கு போன் போட்டார்.
நீயும் பொண்ணுதானே… என் மகள் வாழ்வை ஏன் சீரழிக்குற… உனக்கு பயந்து உன் புள்ளைக்கு பயந்து தானே என் தங்கச்சி வீட்டுக்கு அனுப்பி வெச்சேன். என் புள்ள காணுமே.
வயிற்றில் புளி கரைத்தது. விபரீத முடிவு எடுத்துட்டானா?
உன் பொண்ணு…நிறுத்து போலீசுக்கு போகப் போறேன். உன் புள்ள, அவ கூட இருந்தா நடக்கறதே வேற… தன் லாயருக்கு தகவல் தெரிவித்தாள் முல்லை.
அம்மா, உங்க பிடிவாதம் எங்கே கொண்டு வந்து இருக்கு பாருங்க… ராணிபேட்டையில் தான் இருக்கேன். நான் கவனிச்சுகிறேன். எந்த ஓட்டல்?
வேலூர் கண்ணன் ஓட்டல் என்றாள்.அதே சமயம், சுஜி உனக்காக உயிரை விடவும் சித்தமா இருக்கேன்.ஊரைக் கூட்டி கல்யாணம் நடக்காது. இறுதி ஊர்வலம் ஊர் அறிய…நான் தயார்… மருந்து… விஷம்… டேபிளில் வைத்தான். போலீஸ் துணையுடன் லாயர் சிசிடிவி போட்டோஸ் பார்த்தனர். எங்கும் சுஜி தெரியவில்லை. ஓட்டல் அறையில் தங்கியோர் லிஸ்ட் எடுத்தனர்… ரூம்பாயை அழைத்தனர். கண்ணன் சுஜி போட்டோ தந்து நீங்க யாராவது பார்த்தீங்களா? அதில் ஒருவன் பேந்த பேந்த விழித்தான். சார் இப்பதான் பால் தந்துட்டு வந்தேன்.
எந்த ரூம் நம்பர்… 112… லெட்ஜரில் மீண்டும் பார்த்தனர். சுஜியின் அப்பா ஜெகன் நாதன் பேரில் டிக்காயிருந்தது. ஷேக்… அவசர அவசரமாக ஓடினர். மாற்று சாவியால் திறந்தனர். சோபாவில் கமலநாதனும் கட்டிலில் சுஜியும் படுத்து இருந்தாள். சுய உணர்வு இல்லை. ஆம்புலன்சுக்கு தெரிவித்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒரு மணி நேரம் போராடி உயிர் பிழைக்க வைத்தார் மருத்துவர்.
வேண்டா வெறுப்பாக திருமணம் நடந்தது. இன்றுவரை முல்லை மருமகளை ஏற்றுக்கொள்ளவில்லை. சாக்கு போக்கு குற்றப்பத்திரிகை படித்துக் கொண்டே இருக்கிறாள்.
சுஜியின் அப்பா ஜெகன்நாதனும் மருமகனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜென்ம விரோதியை பார்ப்பது போல நடந்து கொள்கிறார்.அன்று இரவு படுத்தவள் கண்முன் பழைய நினைவுகள் திரைப்படமாக ஓடியது. இளையவனும் அண்ணன் காட்டிய வழியில் சென்றால். அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடுமே…
சமையல் அறையில் சுஜி காபி கலந்து கொண்டு இருந்தாள். சுஜி… இங்கே வா என்று முதல் முறையாக மருமகளை பெயரிட்டு அழைத்தாள்.
ஆச்சரியத்தில் விழிகள் விரித்து நோக்கினாள். உன்னை தான் அழைத்தேன். செய்தித்தாள் வாசித்திருந்த கமலநாதன், விமலன் உட்பட வியப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தனர். நடந்து முடிந்ததை மறந்து போவோம். உன் கொழுந்தன் விமலனுக்கு பிடிச்ச பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்க… பேரப்பிள்ளைகளை பார்த்தா போதும். இந்த ஜென்மம் கடைத்தேறும் என்றாள். அம்மா மாறிட்டா? மாமனார் மாறுவார் காத்திருப்பேன் என உறுதி கொண்டான். அன்று இரவு சுஜி… விலகிப் போகாதே… நில்… அம்மா ஆசை பேரன்… பேத்தி ஆகாதா? என செவ்விதழ் விரித்து சிரித்தாள்.