குங்கிலியம் தரும் ஆரோக்கியம்! (மருத்துவம்)
குங்கிலியம் கைப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்களைக் குணமாக்கும்.வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு. மருத்துவப் பயன் அனைத்திற்கும் பொதுவானதே. இருப்பினும் அவற்றிற்கென்று தனித்தனியான, சிறப்பு வாய்ந்த மருத்துவப் பயன்களும் உள்ளன.
வெள்ளைக் குங்கிலியம்
நிறம் ஏதுமின்றி இருக்கும்; உள் மூலத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கைச் சீராக்கும்; மூட்டுவலிக்குச் சிறப்பான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
சிவப்புக் குங்கிலியம்
பழுப்பு வெள்ளை அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருக்கும். விஷக்கடி மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுகின்றது.
கட்டிகள், காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்த, சிவப்பு குங்கிலியத்தை, 2 கிராம் அளவில் தூளாக்கி, 1 டம்ளர் பாலில் இட்டுக் கலக்கி, சரியாகும் வரை, தினமும் காலையில் குடித்துவர வேண்டும்.
பூனைக்கண் குங்கிலியம்
உருண்டையானவை, மஞ்சள் அல்லது தங்கநிறம் கொண்டதாகவும், பூனைக்கண் போன்றும் இருக்கும். இதிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வீக்கத்தைக் கரைக்கப் பயன்படுகின்றது. குங்கிலியத்தைக்கொண்டு, குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய பற்பம், குங்கிலியத்தைலம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
மேகப்புண், வெட்டை போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த மருந்துகள் முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக்கூடிய கருமருது மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படுகின்றது.
கருமருது மரத்தினைக் கீறி, வடு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின் சேகரிக்கப்படுகிறது. இது உறைந்து, மருத்துவத்தில் பயன்படும் குங்கிலியமாகிறது. குங்கிலியம் காய்ந்த நிலையில், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குங்கிலியத்திற்கு, குக்கில், குக்கிலியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இது கற்பூரத் தைலத்தில் கரையும்.
50 கிராம் குங்கிலியத்தை தூள் செய்து கொண்டு, ½ லிட்டர் நல்லெண்ணெய் உடன் சேர்த்து, நன்றாகக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொண்டு, மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி தீரும்.புண்கள் ஆற குங்கிலியக் களிம்புகுங்கிலியம், மெழுகு, வகைக்கு 100 கிராம், சிறு தீயில் உருக்கி, 350 மி.லி. நல்லெண்ணெய் சேர்த்து, சூடாக இருக்கும் போதே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி, புண்கள் மீது பற்றாகப் போட வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...