எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 6 Second

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோசமான மனநல கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும். அதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனார். ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோசத்தை அடைய முடியும். தன் மனைவி அல்லது கணவனுடன் உறவு கொள்ளும் போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக் கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும். ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனார். எட்டு வழிகளில் முதல் வழியை இன்று பார்ப்போம்:

முதல் வழி

கலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல். வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதுபோல் காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது. தொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும், கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும். பிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டு விட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோசப்படக்கூடியதாக இருக்கும்.

யாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும் போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்து கொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும். பிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும்தழுவல் வகையைச் சார்ந்ததாகும். இந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோசம், கலவி அனுபவத்திற்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோசமாகும்.

கலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது. ஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கனவே அன்பம் அளுபவித்த கணவன்-மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது. ஆனால் காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும். கால் விரலால் கால் விரலைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்!! (மகளிர் பக்கம்)