கிச்சன் டிப்ஸ்!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 48 Second

*கீரைகளை நீரில் நனைத்து செய்தித்தாளில் அல்லது வாழை இலையில் சுற்றிவைத்தால் வாடாது.

*கீரையை மசிக்கும்போது வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்தால் சுவை கூடும்.

*கீரை கடையும் போது சிறிது அரிசி மாவை நீரில் கரைத்துச் சேர்த்தால், சேர்ந்தாற்போல் வரும். கீரைகளைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் நிறம் மாறாது.

  • ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

*ஓமம், வெல்லப்பொடி, சுக்குப்பொடி மூன்றையும் தலா ஒரு கப் கலந்து தேன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொண்டால்
பலகாரங்கள் சாப்பிட்ட பின், ப்பிடலாம். மந்தம் ஏற்படாது. எளிதில் ஜீரணமாகும்.

*வெல்லப்பாகு, சர்க்கரைப்பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சம்பழச்சாறு கலந்தால் பாகு முறியாது.

  • எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

*வெங்காயப் பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், இஞ்சியையும் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். வாசனையும், சுவையும் ஊரையே கூட்டும்.

*இட்லி மாவில் உளுந்து அதிகமாகி விட்டால் இட்லி சரியாக வராது. சிறிது ரவையைக் கலந்து கால் மணி நேரம் ஊறவைத்து இட்லி ஊற்றினால் சரியாகி விடும்.

*கட்டோடு வாங்கும் அப்பளத்தைப் பிரித்து வெயிலில் வைத்து, பிறகு ஒரு சில்வர் பாத்திரத்தில் வைத்துக் கொண்டால் நீண்ட நாள் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.

  • எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*ஜாடியில் தாளித்த ஊறுகாயை வைப்பதற்கு முன் சிறிது கல் உப்பு போட வேண்டும். பின் ஊறுகாயைக் கொட்டி வறுத்துப் பொடித்த கடுகுத்தூள், ஊறுகாயின் மேலே காய்ச்சாத நல்லெண்ணெய் ஊற்றினால் வாசமுடன் இருக்கும். சீக்கிரம் கெட்டும் போகாது.

*தக்காளி அனைத்தும் நன்றாகப் பழுத்து இருந்தால் தக்காளிப் பழத்தின் மீது டேபிள் சால்ட் தூவி விசறி வைத்து விட்டால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

*குளிர் சாதனப் பெட்டியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாயில் கவரில் வைத்தால் சீக்கிரம் வாடிப் போகாது.

  • ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*பாகற்காயை அப்படியே பச்சையாக வதக்காமல், தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி பின் வாணலியில் போட்டு வதக்கினால் கசப்பு துளியும் இருக்காது. நான்கு ஸ்பூன் எண்ணெயிலேயே காயும் மொறுமொறுவென்று இருக்கும்.

*காபிப் பொடியைக் காற்றுப் புகாத டப்பாவில் நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்தால், பல நாட்களுக்கு மணம் குறையாமலும், கெட்டியாகாமலும் இருக்கும்.

*சிறிதளவு உப்பு கலந்த நீரில் தக்காளிப் பழங்களைப் போட்டு வைத்தால், பழங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.

  • அனிதா நரசிம்மராஜ், மதுரை.

*வெள்ளை கொண்டைக்கடலை, வெள்ளை மொச்சை போன்ற வற்றில் சுண்டல் செய்யும் போது நன்கு ஊறவிட்டு வேக வைத்துக் கொண்டு, வழக்கமான தாளிப்புடன், பச்சை மிளகாய், தேங்காயை கொரகொரப்பாக அரைத்து சேர்த்து, இறுதியில் சாட் மசாலா அல்லது ஆம்சூர் பொடி 1 டீஸ்பூன் தூவி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்க சுவையாக இருக்கும்.

*சுண்டல் பரிமாறும்போது கரகரப்பான காராபூந்தி, கேரட் துருவல் தூவி தர சூப்பராக இருக்கும்.

*பாசிப்பருப்பு சுண்டல் தயாரிக்க கொதிக்கும் வெந்நீரில் பருப்பை ஊறவைத்து 10 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு தாளிக்க குழையாமல் சுவையில் அசத்தும்.

  • மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி மிளகு, சீரகம் சேர்த்து புளிக்கரைசலில் கலந்து ரசம் வைத்து சாப்பிட்டால் சுவையோடு இருக்கும்.

*அரிசி களைந்த நீரில் பிடிகருணை, சேனை கிழங்குகளை வேகவைத்தால் நாக்கில் நமைச்சல் ஏற்படாது.

*இட்லி மிளகாய் பொடிக்கு வெறும் வாணலியில் எள்ளை வறுத்து, பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, பருப்பு, வற்றல், பெருங்காயம், சிறிது நிலக்கடலையையும் வறுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒன்றாக உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால், ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

  • கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

தேவையானவை :
கொண்டைக்கடலை – 200 கிராம்,
கேரட் – 4,
பச்சரிசி – ஒரு கைப்பிடி அளவு,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 7,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை: கேரட்டை காய்கறித் துருவலில், வாழைக்காய் பஜ்ஜிக்கு போல் சீவிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் விடாமல் பச்சரியை நன்றாக வறுத்து தனியே வைக்கவும். பிறகு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய்வற்றலை வறுக்கவும். பச்சரிசி, சோம்பு, மிளகு மற்றும் சீரகத்தை தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். இதே போல் வரமிளகாயையும் தனியே அரைக்கவும். முதல்நாள் இரவு ஊற வைத்த கொண்டைக்கடலையை சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

அரைத்த கொண்டைக்கடலை மற்றும் பச்சரிசி கலவையுடன், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து, வரமிளகாய் பொடியை மட்டும் காரத்துக்கேற்ப சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் கேரட்களை இருபக்கமும் தோய்த்து போட்டு, நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். கொண்டைக்கடலை கேரட் பஜ்ஜி ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கண்ணாடிக்கு விடுதலை! (மருத்துவம்)
Next post சிறுகதை-குற்றம்!! (மருத்துவம்)