கால் நரம்பு வலிக்கு கைவைத்தியம்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 21 Second

தற்போதைய சூழலில், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் வளையாது வேலை செய்யும் வாழ்க்கை முறையின் காரணமாக, நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகிறது. இதனால், எலும்புகள் பலவீனமடைவதுடன் பிற உடல்நலம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படுகிறது. இது தவிர, உடல் செயல்பாடுகள் குறைவதால் தசை பலவீனம் மற்றும் தசை வலி ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாக உடலில் உண்டாகும் மிகவும் பொதுவான மற்றொரு சிக்கல் நரம்பு வலியாகும். இதற்கு, சில இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தி லேசான நரம்பு வலிக்கான தீர்வு குறித்து பார்க்கலாம்:

நமது உடலில் இரண்டு பெரிய , நீளமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கைவிரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும். முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும் இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு ( வலி) ஒரு பக்கத்தில்தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையவும் செய்யும்.

கைவைத்தியம்
விளக்கெண்ணெயை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெயில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, அந்த எண்ணெயை இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட வலியுள்ள இடங்களில் தடவலாம்.சிறிதளவு புளியை எடுத்து கரைத்து, அந்த நீருடன் கல் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவி வர, நரம்பு வலி குணமாகும்.

சூடான நல்லெண்ணெய், உப்பு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ்ஜை அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, உலர்ந்த இஞ்சிப் பொடி கால் தேக்கரண்டி இவற்றை அரை கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் வலி குணமாகும்.வெண்நொச்சி இலை இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொண்டாலும் நரம்பு வலி குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவில் முழு சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்னு தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உங்க பாப்பா பொய் சொல்கிறதா? (மருத்துவம்)