உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லங்க…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 30 Second

சிலருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபின்பும் கூட உடலுறவு பற்றிய சந்தேகங்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.

மாதத்தில் எத்தனை நாள் உறவு கொள்வது ஆரோக்கியமானது, எப்படி நடந்துகொள்வது என்ற சந்தேகங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

உடலுறவில் இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் வரையறை என்பது கிடையாது. வாரத்திற்கு மூன்று முறையோ தினந்தோறும் ஒரு முறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம்.

உடலின் தேவை, மூளையின் கட்டளை, ஆண் பெண் உணர்வுகளின் விருப்பம், ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன.

இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.

தினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை. உங்களுக்கு தேவை என்று படுகிறதா? துணையுடன் உற்சாகமாக உடலுறவில் ஈடுபடலாம்.

ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பமான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்திலும், ஆண்களுக்கு புகை, போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவதாலும் அந்த உணர்வுகள் குறைய வாய்ப்புள்ளது.

உணவுகளும், மூலிகைகளும் அந்தரங்க உணர்வைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் இச்சை உணர்வுகளைத் தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது இவ்வளவு ஈஸியா…?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மூர்க்கத்தனமானவர்கள் என்றாலும் குழந்தை மனம் கொண்டவர்கள்!! (மகளிர் பக்கம்)